இலங்கையில் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்.!

Published By: Robert

29 Sep, 2017 | 11:18 AM
image

மாணவி வித்­தியா படு­கொலை குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட 7 பேருடன் சேர்த்து இலங்­கையில் மொத்­த­மாக மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்பட்ட கைதிகள் பட்­டி­ய­லா­னது 1166 ஆக உயர்ந்­துள்­ளது. 

அதில் 333 கைதி­களின் மரண தண்­டனை தீர்ப்­பா­னது மேன் முறை­யீடு ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் மரண தண்­டனைக் கைதிகள் அனை­வரும் நாட­ளா­விய ரீதியில் 5 சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சிறைச்­சா­லைகள் ஊடகப் பேச்­சாளர் துஷார  உபுல்­தெ­னிய கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

தற்­போது மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட அனைத்து மரண தண்­டனை கைதி­களும் வெலிக்­கடை, மஹர, போகம்­பரை, அனு­ரா­த­புரம் மற்றும் பதுளை ஆகிய சிறை­களில் தடுத்து வைக்­கப்பட்­டுள்­ளனர். மொத்­த­மாக இவ்­வாறு 1166 மரண தண்­டனை கைதிகள் இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

அவர்­களில் 333 பேரின் மேன் முறை­யீட்டு விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து அவர்­க­ளது மரண தண்­டனை தீர்ப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 826 பேரின் மரண தண்­டனை தீர்ப்­புக்கு எதி­ரான மேன் முறை­யீட்டு விசா­ர­ணைகள் நிலு­வையில் உள்­ளன. நேற்று முன் தினம் மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட 7 பேரும் இது­வரை மேன் முறை­யீடு செய்­ய­வில்லை.

மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ள 1166 பேரில் 37 பெண்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந் நிலையில் நேற்று முன் தினம் மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்பட்ட 7 பேரும் தற்­போது போகம்­பறை சிரையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள போதும், அவர்­களை மூன்று சிறைச்­சா­லை­களில் அடைக்க தீர்­மா­னிக்­கப்பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை உள்ளக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது. அதன்படி அந்த 7 பேரும் போகம்பறை, வெலிக்கடை மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளில் அடைக்கப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02