வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது ஒரு இலட்சத்து 80ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கவில்லை. அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது நல்லதல்ல. அவர்களை அகற்றும் நோக்கமும் எமக்கு இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையிலேயே படையினர் செயற்பாடுவகின்றனர்.  எனினும் இராணுவம் தொடர்பில் அவர்களுக்கு ஏதேனும் தெரிந்துகொள்ளவேண்டிய தேவை இருப்பின் வௌிப்படையான கலந்துரையடலுக்கு தாம் தயார் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டுகளில் கலந்துகொண்ட  தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதானது,

வடக்கில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் இராணுவத்தினர் தற்போது உள்ளதாக கூறுவது தவறானதாகும். இராணுவத்தின் எண்ணிக்கை குறித்து எவருக்கும் பொய்யுரைக்கத் தேவையில்லை. வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டு இருக்கவில்லை. 

யுத்தத்தின் பின்னர் படிப்படியாக அவர்கள் குறைக்கபட்டு இன்று தேவைக்கேற்ற இராணுவம் மட்டுமே வடக்கு கிழக்கில் உள்ளனர்.  தேவைக்கு ஏற்பவும் ஆய்வுகளின் அடிப்படையிலான கருத்தின்படியே வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில், அவர்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருப்பது சாதாரணமானதாகும். அவர்களை வடக்கு கிழக்கில் இருந்து வௌியேற்ற எந்த தேவைப்படும் இல்லை. இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தனர். 

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில் சிங்கள, பௌத்த மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதன் விளக்கம் முதலமைச்சருக்கு கிடைத்திருக்கும் என நான் நம்புகிறேன். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நான் முதலமைச்சரிடத்தில் கூறியிருக்கின்றேன். முதலமைச்சர் பீடாதிபதிகளை சந்தித்துள்ளமை பாராட்டத்தக்க விடயமொன்றாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையிலேயே படையினர் செயற்பட்டு வருகின்றனர். எனினும்  இராணுவம் தொடர்பில் அவர்களுக்கு ஏதேனும் தெரிந்துகொள்ளவேண்டியதேவை இருப்பின் அது குறித்த வௌிப்படையான கலந்துரையடலுக்கு நாம் தயார் என்றார்.