வஸீம் தாஜுதீன் படு­கொலை தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.!

Published By: Robert

29 Sep, 2017 | 09:07 AM
image

Image result for வஸீம் தாஜுதீன் virakesari

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்பட்ட தினத்தில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்து நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் அப்­போ­தைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்­டோ­ருக்கு எடுக்கப்பட்ட தொலை­பேசி அழைப்­புக்கள் தொடர்பில் பல முக்­கிய தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன. 

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் விக்­ர­ம­ச­க­ரவின் கீழ் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்ர விம­ல­சிறி தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் இவை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும், மிக விரைவில் தஜுதீன் கொலை தொடர்பில் இது­வரை வெளிப்­ப­டாத சந்­தேக நபர்கள் தொடர்பில் தக­வல்கள் வெளி­ப்படும் எனவும் நேற்று மன்­றுக்கு அறி­விக்­கப்பட்­டது. பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க இதனை நேற்று மன்­றுக்கு அறி­வித்தார்.

வஸீம் தாஜுதீன் படு கொலை தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்கி முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது இக்­கொலை தொடர்பில் கைதாகி பிணையில் உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி சுமித் சம்­பிக்க பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜ­ராகி இருந்­தனர்.

இந் நிலையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­க­ளுடன் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­நா­யக்க மன்றில் ஆஜ­ரானார். குறித்த கொலை தொடர்­பி­லான விசா­ர­ணையின் தற்­போ­தைய நிலை­மையை அவர் மன்­றுக்கு அறி­வித்தார்.

இதன்­போதே, கொலை இடம்­பெற்ற தினத்தில் ஜனாதிபதி செய­ல­கத்தில் இருந்து நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட பல­ருக்கு தொலை­பேசி அழைப்பு எடுக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில்  முன்­னெ­டுக்­கப்பட்ட  விசா­ர­ணை­களில் இந்த விவ­கா­ரத்தில் தொடர்­பு­டைய பல சந்­தேக நபர்கள் தொடர்பில் சாத­க­மான தக­வல்­களை மிக விரைவில் வெளிப்­ப­டுத்தும் கட்­டத்தில் உள்ளோம்.என தெரி­வித்தார்.  

தற்­போதும்  அது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை தொடர்­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார். இந் நிலையில் அது தொடர்­பி­லான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க ஆலோசனை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி சமர்பிக்க உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32