திருமணம் செய்வதாகக் கூறி இளைஞர் ஒருவருடன் உறவில் ஈடுபட்டபின் ஏமாற்ற முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

ஷாஸான் ஷேக் என்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். டேட்டிங் இணையதளம் ஒன்று மூலமாக மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஓரினச் சேர்க்கையாளர்களான இருவரும் அடிக்கடி தொடர்பு ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மும்பை வந்த ஷேக், குறித்த இளைஞரின் வீட்டில் தங்கியுள்ளார். வீட்டிலேயே இருவரும் திருமணம் (!) செய்துகொண்டனர். 

திருமணத்துக்குப் பின் நான்கு நாட்கள் இளைஞர் வீட்டிலேயே தங்கியிருந்த ஷேக், சில நாட்களில் திரும்பி வருவதாகச் சென்றார். எனினும், அதன்பின் இளைஞருடனான தொடர்பை அறவே தவிர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து இளைஞர் அளித்த புகாரின் பேரில் ஷேக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் கூறும்போது, “அவரை நம்பி ஏமாந்துவிட்டேன். முதலிரவன்று (!) எனது பிறப்புறுப்பில் கடுமையான வலியுடன் இரத்தப்போக்கும் ஏற்பட்டது. இதே நிலையில் நான்கு நாட்கள் என்னை உறவுக்கு உட்படுத்தினார். அவரால் எனது பணம், நிம்மதி, ஆரோக்கியம் அனைத்தையும் இழந்துவிட்டேன்” என்று கண்ணீர் மல்கினார்.