கருப்பையில் பொருத்தக்கூடிய ஹோர்மோன் சுரப்பி கருவி

Published By: Robert

28 Sep, 2017 | 12:45 PM
image

இன்றைய சூழலில் பெண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றிக் கொண்டுவிட்டதால் மாத விடாய் சுழற்சியில் கோளாறுகள், குறைபாடுகள், சிக்கல்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள்.

அதிலும் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அதிகளவிலான ரத்தபோக்கு ஏற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையானவர்கள் தங்களின் கருப்பையை அகற்றிவிடுகிறார்கள். ஆனால் தற்போது இந்நிலைக்கு மாற்றாக பல்வேறு வகையினதான சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதலில் பெண்கள் தங்களின் அதிகப்படியான இரத்தபோக்கிற்கான காரணத்தை கண்டறியவேண்டும். அதற்குரிய பரிசோதனைகளை செய்து கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து கருப்பை கட்டிகள், வீக்கம், சினைப்பை கட்டிகள், கருப்பை உட்புறச் சுவர் தடிமன் ஆகியவற்றைப் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதே போல் எண்டோமெட்ரியர் பயாப்சி எடுத்து கருப்பை வாய் புற்றுநோயின் தொடக்க கால அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதன் பிறகே இரத்தப்போக்கை கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகளை செய்து கொள்ளவேண்டும். மாத்திரைகள், ஹோர்மோன் ஊசிகள் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் தற்போது கருப்பையில் பொருத்திக் கொள்வது போன்ற ஹோர்மோன் சுரப்பி கருவிகளும் கிடைக்கிறது. அதனையும் பயன்படுத்திக் கொண்டு இதற்கு தீர்வு பெறலாம்.

டொக்டர் எழிலரசி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29