பாதெனிய, அநுராதபுர வீதியின் நெலும்பத்வெவ சந்தியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் எனவும் அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பன்பொல வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் இது குறித்து மேலதிக விசாரணைகளை  அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.