நடிகை தமன்னா தயாரிப்பாளராகிறார். விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்திலும், விஷ்ணு விஷால் நடிக்கும் பெண் ஒன்று கண்டேன் என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார் தமன்னா.

இவர் பொலிவுட் நடிகர் குணால் கோஹ்லி இயக்கத்தில் விரைவில் தொடங்கவிருக்கும் பெயரிடப்படாத தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதுடன், இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.

பொதுவாக நடிகர்கள் தான் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை திரைத்தொழிலில் முதலீடு செய்வார்கள். நடிகைகள் பெரும்பாலும் ஹொட்டேல்கள், ரியல் எஸ்டேட்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றில் தான் முதலீடு செய்வார்கள். ஆனால் நடிகை தமன்னா முதன்முதலாக தான் நடிக்கும் தெலுங்குப் படத்திற்கு தயாரிப்பாளராகியிருக்கிறார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை தீபாவளியன்று வெளியிடவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

தகவல் : சென்னை அலுவலகம்