ஐந்து வரு­டங்­க­ளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்­ப­மா­க­வுள்­ளது ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் கிரிக்கெட் தொடர்.

இந்த அறி­வித்­தலை ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் ஏற்­பாட்­டுக்­குழு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

பிக்பாஷ், ஐ.பி.எல். போன்ற தொழில்­முறை கிரிக்கெட் தொடர்கள் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர் பிர­ப­ல­மாக இருந்த ஒரு தொடர்தான் இந்த ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் கிரிக்கெட் தொடர்.

அதன்­படி இவ்­வாண்­டுக்­கான தொடர் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 28ஆம் திகதி மற்றும் 29ஆம் திக­தி­களில் ஹொங்கொங் கொவுலுன் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தத் தொடரில் இலங்கை உட்­பட 8 நாடுகள் கலந்­து­கொள்­கின்­றன. கடை­சி­யாக இந்தத் தொடர் 2012ஆம் ஆண்டு நடை­பெற்­றது. இதில் பாகிஸ்தான் அணி சம்­பியன் பட்டம் வென்­றது.

இது­வ­ரையில் நடை­பெற்­றுள்ள போட்டித் தொடர்களில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா 5 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளமை 

குறிப்பிடத்தக்கது.