சீனாவில் 20ஆ-வது ஆசிய மூத்தோர் தட­கள சம்­பி­யன்ஷிப் போட்­டியில் மூத்தோர் தட­க­ளத்தில் பங்­கேற்­க­வி­ருந்த 101 வயது வீரர் மன் கவு­ருக்கு விசா மறுக்­கப்­பட்­டுள்­ளது.

சீனாவின் ருகாவ் நகரில் 20ஆ-வது ஆசிய மூத்தோர் தட­கள சம்­பி­யன்ஷிப் போட்டி நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இதில் இந்­திய மூத்த ஓட்­டப்­பந்­தய வீராங்­கனை 101 வய­தான மன் கவுர் தனது 79 வயது மகன் குர்தேவ் சிங்­குடன் கலந்து கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்தார். 

ஆனால் டெல்­லியில் உள்ள சீன தூத­ர­கத்தில் விசா­வுக்கு அணு­கிய போது, போட்டி அமைப்­பா­ளர்கள் தனிப்­பட்ட முறையில் அழைத்­த­தற்­கான கடி­தத்தை இணைக்­கா­ததால் விசா தர இய­லாது என்று கூறி மறுத்­து­விட்­டனர். 

இதனால் அவர் குறித்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளார்.