குளவிக் கொட்டுக்கு இலக்கான 16 பேர் வைத்தியசாலையில்…

கடுகஸ்தோட்டை  பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 55 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான  ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கடுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் 44 சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் 9 மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.