அரிசி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சாதாரண சந்தையில் தற்போதுள்ள விலையிலும் பார்க்க குறைந்த விலையில் சதொசவில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற, அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில மாதங்களுக்குள் 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரசியை இறக்குமதி செய்ய தீமானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.