புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட முதலாம் மற்றும் 7ஆம் இலக்க சந்தேகநபர்களில் முதலாம் இலக்க சந்தேக நபரே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க நபர், திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட நிலையில் அவருக்கு வழக்கொன்று ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அவர் விடுதலையான சிறிது நேரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் நீதிமன்றிலிருந்து, கடுமையான பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ளார்.

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.