‘சொர்க்கத்தை’ அடைவதற்காக தன் இரண்டு வயதுப் பெண் குழந்தையை உயிருடன் எரித்துக் கொலைசெய்த இளம் தாயை பொலிஸார் கைது செய்தனர்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த 27 வயதான இந்தப் பெண் விவாகரத்தானவர். தன் இரண்டு வயது மகளுடனும் தாயுடனும் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணின் வீட்டில் குழந்தை அலறும் சத்தம் கேட்பதாகவும், அவரது வாகனத் தரிப்பிடத்தில் இருந்து புகை எழுவதாகவும் அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி அங்கு வந்த பொலிஸார், இறைச்சியை வாட்டும் ‘பார்பிக்யு’ கம்பியில், கருகிய நிலையில் இருந்த குழந்தையொன்றின் சடலத்தைக் கைப்பற்றினர்.

விசாரணையின்போது, தானும் தன் குழந்தையும் சொர்க்கத்தை அடைய வேண்டியே தன் குழந்தையை எரித்ததாகவும், தானும் எரிந்து உயிர்விடத் திட்டமிட்டிருந்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண் தற்போது மனநல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.