பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார தேரர், கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.