கல்லூரி மாணவிகளைக் குறிவைத்து ஆபாச விளம்பரங்கள்!

Published By: Devika

27 Sep, 2017 | 09:35 PM
image

பெல்ஜியத்தில், கல்லூரி மாணவிகளைக் குறிவைத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த இணையதள விளம்பரங்களை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

நோர்வேயைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ரிச் மீட் பியூட்டிஃபுல்’ (RichMeetBeautiful) என்ற இந்த இணையதளம், பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்ல்ஸில், கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் பெரிய அளவில் ஆபாசமான விளம்பரங்களைக் காட்சிப் படுத்திவந்தன.

பெரிய ட்ரக்குகளிலும், பதாகைகளிலும் ஏறக்குறைய அரை நிர்வாண இளம் பெண்ணின் தோற்றத்தை உள்ளடக்கிய விளம்பரங்களை இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இதைக் கண்டு வெகுண்ட பொதுமக்களும் மாணவர் அமைப்புகளும் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் அந்த விளம்பரங்களை அகற்றி வருகின்றனர்.

இதேவேளை, அந்நிறுவனத்தின் உரிமையாளர், தனது நிறுவனம் அழகிய இளம் பெண்களை நடுத்தர வயதுடைய செல்வந்த ஆண்களுக்கு நட்பு ரீதியாகவே அறிமுகப்படுத்தி வருகிறது என்றும், அதில் பாலுறவுக்கு அனுமதியில்லை என்றும் சட்டதிட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த இணையதளத்தில் இதுவரை சுமார் ஒன்றரை இலட்சம் இளம் பெண்கள் தம்மைப் பதிவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47