இன்றைய நவீன உலகு இணையவாசிகளின் காலமாக திகழ்கின்ற நிலையில் கூகுள் இல்லையென்றால் எதையும் தெரிந்து கொள்ளவோ, பார்க்கவோ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கை கூட கூகுள் சேர்ச்சில் ஆரம்பித்து, கூகுள் சேர்ச்சில் முடிகிறது அத்தகைய கூகுள் இன்று தனது 19ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

கூகுளின் பிறந்த நாளில் பலருக்கு குழப்பம் இருந்த போதிலும் செப்டம்பர் 27ஆம் திகதியே பிறந்தநாள் உத்தியோக பூர்வமாக கொண்டாடப்படுகிறது.

கூகுளின் பிறந்த நாளில் பலருக்கு குழப்பம் இருந்த போதிலும், 2005ஆம் ஆண்டிற்கு பின்னர்  கூகுளின் பிறந்த  நாள்  செப்டம்பர் 27ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

"google.com" என்ற டொமைன்  பெயரை 1997ஆம் ஆண்டு 15ஆம் திகதி கூகுள் நிறுவனம் பதிவு செய்தது. இருந்த போதிலும் லாரி பேஜ், சேர்ஜ் பிரின் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கூகுல் ஒரு நிறுவனமாக அதன் செயற்பாடுகளை தொடங்கியது 1998ஆம் ஆண்டு இதனை கருத்தில் கொண்டே கூகுளின் வயது கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில் கூகுள் தனது 4ஆவது பிறந்த நாளை 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதியும், 5ஆவது பிறந்த நாளை 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதியும், 6ஆவது பிறந்த நாளை 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதியும்,7ஆவது பிறந்த நாளை 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதியும் கொண்டாடியது.

அதன் பின்னர் அதன் பிறந்தநாள் கொண்டாட்டம் செப்டம்பர் 27ஆம் திகதி என நிர்ணயிக்கப்பட்டு இன்றளவும் இதே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே கூகுள் லோகோவை சொடுக்கும் போது “when is google's birthday"  என கூகுள் தேடுகிறது.

எது எப்படி இருந்தாலும் இன்று தனது 19ஆவது பிறந்த நாளை கொண்டாடும் கூகுளுக்கு வீரகேசரி இணையத்தளத்தின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்