இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

Published By: Priyatharshan

27 Sep, 2017 | 06:27 PM
image

(ஆ.பிரபுராவ் ) 

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான உயிர், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓமினி ரக கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த உச்சிப்புளி பொலிஸார் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை விசேட பொலிஸ் குழு அமைத்து தேடி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உச்சிப்புளி பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரப்பன்வலசை என்னும் பகுதியிலுள்ள தோட்டத்தில் சோதனை செய்த போது அங்கு கடல் அட்டைகள் உயிருடனும் பதப்படுத்திய நிலையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

பொலிஸார் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர். ஆனால் சம்பவ இடத்தை பொலிஸார் சோதனை செய்த போது முருகேசன் என்பவரது அடையாள அட்டை கிடைத்துள்ளது.

முகேசன் மற்றும் தப்பி ஓடிய நபர்கள் மீது உச்சிப்புளி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை விசேட பொலிஸ் குழு அமைத்து தேடி வருகின்றனர். 

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் இருபது  இலட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் சர்வதேச கடத்தல்காரான விஜய்ஆனந்தின் தம்பி முருகேசன் என்பதால் தீவிர தேடுதல் வேட்டையில் மாவட்ட பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47