கொழும்பு 7 வோர்ட் பிரதேசத்தில் வாகனமொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக, குறித்த பாதையினூடான போக்குவரத்துகள் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.