பதுளை, தெமோதர பகுதியில் 11,880 மில்லியன் ரூபா செலவில் ஒன்றிணைந்த குடிநீர் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இத் திட்டம் பதுளை மாவட்டத்தில் முறைப்படுத்தப்பட்டுள்ள முதலாவதும் மிகப்பெரியதுமான குடிநீர் திட்டமாகும்.

இக் குடிநீர் திட்டத்தின் கீழ் உமா ஓயா செயற்திட்டம் காரணமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள பதுளை மாவட்டத்தின் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளனர்.