இலங்­கையின் பொரு­ளா­தா­ர­மா­னது 2017 ஆம் ஆண்டின்  முத­லாம் காலாண்டில் பதிவு செய்த  3.8 சத­வீத வளர்ச்­சி­யுடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில், 4 சத­வீ­த­மாக பதி­வா­கி­யுள்­ள­தாக இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

இதன் படி நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது பாத­க­மான வானிலை நிலை­மை­க­ளாலும் சாத­க­மற்ற வெளி­நாட்டுக் கேள்­வி­யி­னாலும் தொடர்ந்தும் பாதிப்­ப­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பெறு­ம­தி­கூட்­டல்­களின் நிய­தி­களில், ஆண்டின் முத­ல­ரைக்­கா­லப்­ப­கு­தியில் கட்­டு­மானம், கல்லு­டைத்தல் மற்றும் சுரங்­க­ம­கழ்தல், நிதி­யியல் பணி நட­வ­டிக்­கைகள் மற்றும் மொத்த மற்றும் சில்­லறை வர்த்­தகம் என்­பன முக்­கிய வளர்ச்சித் தூண்­டு­தல்­க­ளாகக் காணப்­பட்­டன.

அண்­மைக்­கால வளர்ச்சி வாய்ப்­புக்­கள மீதான குழப்­ப­நி­லைகள் தொடர்ந்­த­போ­திலும் முன்­னோக்­கிய குறி­காட்­டிகள் மேம்­பட்ட நடுத்­தர கால வாய்ப்­புக்­களை காட்­டு­கின்ற வேளையில், இவை எதிர்­பார்க்ப்­படும் அமைப்­பியல் சார்ந்த சீர்தி­ருத்­தங்கள் மற்றும் எதிர்ப்­பார்க்­கப்­படும் வெளி­நாட்டு முத­லீ­டு­களின் உட்­பாய்ச்­சல்­க­ளினால் பெரு­ம­ள­விற்கு பெறப்­படும்.

அதேவேளை கொழும்பு நுகர்வோர் விலைச்­சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகிய இரண்­டி­னையும் அடிப்­ப­டை­யாகக் கொண்ட முதன்மைப் பண­வீக்­க­மா­னது வரித்­தி­ருத்­தங்­களின் தளத்­தாக்கம் அதே­போன்று உண­வுப்­பொ­ருட்­களின் உயர்ந்த விலைகள் என்­ப­வற்றைப் பிர­தி­ப­லிக்கும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் அதி­க­ரித்­துள்­ளது.

உள்­நாட்டுச் சந்­தையில் நில­விய உயர் மட்­டத்­தி­லான பெய­ர­ளவு மற்றும் உண்மை வட்டி வீதங்­க­ளுக்கு பதி­லி­றுத்தும் வகையில், வர்த்­தக வங்­கி­க­ளினால் தனியார் துறைக்கு வழங்­கப்­பட்ட கொடு­கடன் வளர்ச்­சி­யா­னது 2016 ஜூலை மாதத்­தி­லி­ருந்து படிப்­ப­டி­யான தளர்ச்­சியைக் காட்­டு­கின்­றது. இது­வ­ரை­யான ஆண்டு காலத்தில்,வங்­கித்­தொழில் முறை­மை­யினால் அர­சிற்கு வழங்­கப்­பட்ட தேறிய கொடு­கடன் உயர்­வாக காணப்­பட்­ட­போதும்,மத்­திய வங்­கி­யினால் அர­சிற்கு வழங்­கப்­பட்ட தேறிய கொடு­கடன் கடு­மை­யாக வீழ்ச்­சி­ய­டைந்­தது. 

இதேவேளை வெளி­நாட்டுத் துறையில், ஏற்­று­ம­தி­க­ளி­லி­ருந்­தான வரு­வாய்கள் 2017  ஜூலை மாதத் தில் தொடர்ச்­சி­யாக ஐந்­தா­வது மாத­மாக நேர்க்­க­ணிய வளர்­ச­சியைப் பேணி­யுள்­ளது. எனினும், வலு உரு­வாக்கம் மற்றும் உணவு உற்­பத்தி என்­ப­வற்றின் மீது வானிலை தொடர்­பான குழப்­ப­நி­லை­களின் பகு­தி­ய­ளவு தாக்­கத்­தினால் அதி­க­ரித்த இறக்­கு­மதி செல­வி­ன­ததின் விளை­வாக, வர்­தகப் பற்­றாக்­கு­றை­யா­னது 2017 ஜூலையில் விரி­வ­டைந்­தது. சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கைகள் மற்றும் அத­னுடன் தொடா்­பான வெளி­நாட்டுச் செலா­வணி உட்­பாய்ச்­சல்கள் திரண்ட அடிப்­ப­டையில் வளர்ச்­சி­ய­டைந்­தன. தொழி­லாளர் பண­வ­னுப்­பல்கள் 2017 ஜூலையில் அதி­க­ரித்­த­போ­திலும், மத்­திய கிழக்கில் நில­விய பொரு­ளா­தா­ரத்தின் மந்­த­மான செய­லாற்றம் மற்றும் பூகோள அர­சியல் நிச்­ச­ய­மற்­ற­தன்­மைகள் என்­ப­வற்றின் விளைவால் ஆண்டு காலப்­ப­கு­தியில் திரண்ட அடிப்­ப­டையில் வீழ்ச்­சி­ய­டை­கி­றது. ரூபாவில் குறித்­து­ரைக்­கப்பட்ட அரச பிணை­யங்­க­ளின் ­சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரி­வர்த்தனை என்­பன வெளி­நாட்டு உட்­பாய்ச்­சல்­களைத் தொடர்ந்தும் கவர்­கி­றது. இத்­த­கைய அபி­வி­ருத்­தி­களின் மத்­தியில், மத்­திய வங்­கியின் உள்­நாட்டுச் சந்­தை­யி­லி­ருந்­தான வெளி­நாட்டுச் செலா­வ­ணியின் திரண்ட கொள்­வ­ன­வா­னது தேறிய அடிப்­ப­டையில் ஐ.அ.டொலர் 1.1 பில்­லி­யனை கடந்த­துடன் மொத்த அலு­வல்சார் ஒதுக்குகள் 2016 இறு­தியின் ஐ.அ.டொலர் 6.0 பில்­லி­ய­னி­லி­ரு­நது 2017செப்­டம்பர் 21 ஆம் திகதி ஏற­த­தாழ ஐ.அ.டொலர் 7.3 பில்­லி­ய­னுக்கு   மேம்­பட்டது. செலாவணி வீதத்தின் தீர்மானததில் காணப்படும் அதிகரித்த நெகிழ்ச்சித்தன்மையினால், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைகளில் அழுத்தங்கள் கணிசமான அளவால் தளர்ந்து, ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவானது 2016 ஆம் ஆண்டில் அவதானிக்கப்பட்ட 3.8 சதவீத பெறுமானத் தேய்வுடன் ஒப்பிடும் போது 2017 செப்டம்பர்  22 ஆம் திகதி வரையில் 2.0 சதவீத திரண்ட பெறுமதித் தேய்வினை விளைவித்தது.