சட்­ட­வி­ரோ­த­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களை கடத்­தி­யமை தொடர்பில் முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்­க­வுக்கு நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கவும் அது தொடர்பில் கடற்­ப­டையில் இடம்­பெற்ற உள்­ளக விசா­ர­ணையில் உறு­தி­யா­ன­போதும் அந்த விசா­ரணை அறிக்கை மறைக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. 

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூகக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்­துள்ள, 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணையின் போதே இந்த தகவல் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது. இது தொடர்பில் கோட்டை நீதி­மன்­றுக்கும் அறிக்கை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களை கடத்­தி­யமை தொடர்பில் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க,  லெப்­டினன் கொமாண்டர் வீர­சிங்க ஆகிய இரு அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக  ரியர் அட்­மிரல் சேனா­ரத்ன, கொமாண்டர் போல் ஆகியோர் அடங்­கிய விசா­ரணைக் குழுவால் உள்­ளக விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்­டுள்­ளது. அதில் குறித்த  தஸ­நா­யக்­க­வையும் வீர­சிங்­க­வையும் உட­ன­டி­யாக கடற்­ப­டையில் இருந்து  நிறுத்­து­மாறு சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

எனினும் தஸ­நா­யக்க குறித்த காலப்­ப­கு­தியில் கடற்­படை பொலி­ஸுடன் இணைந்த பதவி ஒன்றில் இருந்­துள்ள நிலையில், மனிதக் கடத்தல் தொடர்பில் அவர் பிரத்­தி­யேக விசா­ரணை செய்­துள்ளார். அதன்­படி வீர­சிங்க அந்த சட்­ட­வி­ரோத செயல் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யுடன் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் ரியர் அட்­மிரல் சேனா­ரத்ன உள்­ளிட்­டோரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ரணை அறிக்­கையை கடற்­படை சி.ஐ.டி. கோரி­ய­போதும் வழங்­காது இழுத்­த­டிப்பு செய்­வ­தாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு கோரும் போது தஸ­நா­யக்­க­வுக்கு சார்­பான, அவர் செய்த விசா­ரணை அறிக்­கையை மட்­டுமே கடற்­ப­டையின் முன்னாள் உளவுத் துறை பணிப்­பாளர் நிஷங்­கவின் கையொப்­பத்­துடன் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய குறித்த உயர் அதி­காரி, தற்­போது நிஷங்க இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள நிலை­யிலும் புதி­தாக கடற்­ப­டையின் தள­ப­தி­யாக சின்­னையா பொறுப்­பேற்­றுள்ள நிலை­யிலும் ரியர் அட்­மிரல் சேனா­ரத்­னவின் விசா­ரணை அறிக்­கையை மீள கோரி  கடற்­படை தள­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

தஸ­நா­யக்க உள்­ளிட்ட 7 சந்­தே­க­ந­பர்கள் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­கா­ரத்தில் கைதாகி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு எதி­ ராக கடற்­ப­டையின் கப்டன் வெல­கெ­தர, முன்னாள் சிப்பாய் பந்து குமார உள்­ளிட் டோர் பிர­பல சாட்­சி­யா­ளர்­க­ளாக உள்ள நிலையில், அந்த சாட்­சி­யா­ளர்கள் ஆஸி. மனிதக் கடத்­த­லுடன் தொடர்புபட்­ட­வர் கள் எனவும் அவர்­களை தான்  தண்டிக்க முற்­பட்­டதால் இந்த கடத்­தல்­களுடன் தம்மை இணைத்து சாட்சியம் வழங்கியுள் ளதாகவும் தஸநாயக்க தொடர்ந்து மன்றில் கூறிவந்தார். அந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளிலேயே தஸநாயக்கவுக்கும் மனிதக் கடத்தலுக்கும் இடையில் இருந்த தொடர்பு வெளிப்படுத் தப்பட்டுள்ளது.