நாட்டின் வரவு-செலவுத் திட்டத்துக்கு பொதுமக்களின் ஆலோசனைகள்

Published By: Devika

26 Sep, 2017 | 11:32 PM
image

அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை அமைச்சரவை, அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் நிதியமைச்சு கோரியுள்ளது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இவ்வாண்டு நவம்பர் மாதமளவில் கையளிக்கப்படவுள்ளது.

உறுதியான பொருளாதாரம், வளம் நிறைந்த நாடு மற்றும் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு சிறந்த வரவு-செலவுத் திட்டத்தை அமுல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கு பொதுமக்களிடம் இருந்தும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான முன்மொழிவுகளை அனுப்ப விரும்புவோர், Ministry of Finance, The Secretariat, Colombo 01, என்ற முகவரிக்கோ அல்லது info@itmd.treasury.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, எதிர்வரும் பதினைந்தாம் திகதிக்கு முன்னதாகக் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய தூண்களைக் கொண்டே இந்த நல்லாட்சி அரசு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேநேரம், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது அவசியம். இதற்காக, தொழில் நிபுணர்கள், கல்வியாளர்கள், உற்பத்தி, சேவை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் பரிச்சியமுள்ளவர்கள் தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பி வைக்கலாம் என்று நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44