ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் கடந்த மாதம் இருபதாம் திகதி நாடு முழுவதுமுள்ள அரசாங்க பாடசாலைகளில் நடைபெற்றது.

இந்தப் பரீட்சைகளில் சுமார் 3 இலட்சத்து 56 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.