உலகப் புகழ்பெற்ற ஹல்பே தேயிலை, எல்ல பகுதியில் அமைந்துள்ள 98 Acres ரிசோர்ட் அன்ட் ஸ்பா மற்றும்  சீக்ரெட் ஹோட்டல் தொடர் (கண்டி, காலி மற்றும் யால ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன) ஆகியவற்றின் தாய் நிறுவனமான U.H.E  குழுமம், அண்மையில் நடைபெற்ற தொழில் முயற்சியாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் நான்கு உயர் விருதுகளை தனதாக்கியிருந்தது.  

இந்த ஆண்டு நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் U.H.E குழுமத்தின் தலைவர் திரு. ஏ.பி.டி. அபேரட்ன ஊவா மாகாணத்துக்கான தங்க விருதை பெற்றுக் கொண்டதுடன், தேசிய மட்டத்தில் “ஆண்டின் தொழில் முயற்சியாளர் 2015” தங்க விருதையும் ஊவா  ஹல்பேவத்த எஸ்டேட்ஸ் பிரைவட் லிமிட்டெட் சார்பாக பெற்றுக் கொண்டார். 

அத்துடன் U.H.E குழுமத்தின் மேற்பார்வை செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் திரு. சாமர அபேரத்ன “ஆண்டின் இளம் தொழில் முயற்சியாளர் விருது 2015” விருதை ஊவா மாகாணம் மற்றும் தேசிய மட்ட 99 Acres ரிசோர்ட் அன்ட் ஸ்பா சார்பாக பெற்றுக் கொண்டார்.

எரந்த அபேரட்ன கருத்து தெரிவிக்கையில், 

“U.H.Eகுழுமம், குடும்ப வியாபாரமாக தேயிலை உற்பத்திச் செயற்பாடுகளையும், ஏற்றுமதி வியாபாரங்களையும் ஆரம்பித்திருந்ததுடன், இலங்கையின் அதிகளவு கவனத்தை ஈர்த்த வியாபாரமாக வளர்ச்சியடைந்துள்ளது. 

குறிப்பாக மூன்று தேயிலைத் தோட்டங்களான ஊவாஹல்பேவத்த, ஊவாகிறீன்லான்ட்ஸ் மற்றும் ஊவாஹல்பே பிளான்டேஷன்ஸ் ஆகியன இவற்றில் உள்ளடங்கியுள்ளன. எமது செயலணியின் கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலமாகவும், ஒரு குடும்பமாக செயலாற்றுவதன் மூலமாகவும் இந்த நிலைக்கு எமது U.H.E குழுமம் உயர்வடைந்துள்ளது” என்றார்.

இலங்கை வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனம் கடந்த 20 ஆண்டு காலமாக இலங்கையின் முன்னணி தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து கௌரவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தேசத்தின் பரந்தளவு  பெருமளவு வியாபாரங்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தி கொண்டாடுவதற்கு வாய்ப்பையும் வழங்குகிறது.

2015 ஆம் ஆண்டை U.H.Eகுழுமம் பின்வரும் விருதுகளை தனதாக்கியிருந்தது, தேசிய வியாபாரச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், மொத்த தேயிலை பிரிவு மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை பிரிவுகளில் “ஆண்டின் சிறந்த தேயிலை ஏற்றுமதியாளர்” ஹொங்கொங்கில் நடைபெற்ற உலக சொகுசு ஹோட்டல் விருதுகள் வழங்கலில், ‘Best Luxury Mountain Resort in the World’ 99 Acres ரிசோர்ட் அன்ட் ஸ்பா வெற்றியீட்டியிருந்ததுடன், ‘TravellersChoice Award’ விருதில் கண்டியிலிருந்து தெரிவாகிய முதல் தர ஹோட்டலாக அமைந்திருந்தது.

U.H.E குரூப் பிரைவட் லிமிட்டெட் பற்றி

இலங்கையை தளமாகக் கொண்டு செயற்படும் U.H.E குரூப், ஏ.பி.டி. அபேரத்ன (தலைவர்) இனால் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிறுவனத்தினால் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் பொருட்கள் போன்றன உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

1971 இல் தேயிலை உற்பத்தியுடன் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த இந்த குரூப், நாடு முழுவதிலும் மூன்று தேயிலை பெருந்தோட்டங்களை தன்வசம் கொண்டுள்ளது. ஊவஹல்பேவத்த டீ ஃபெக்டரி (பிரைவட்), ஊவா கிறீன்லன்ட்ஸ் எஸ்டேட் பிரைவட் லிமிட்டெட் மற்றும் ஊவஹல்பே எஸ்டேட் பிளான்டேஷன்ஸ் பிரைவட் லிமிட்டெட் போன்றன இந்த குரூப் கீழ் காணப்படும் துணை நிறுவனங்களாகும். குரூப் தனது வர்த்தக செயற்பாடுகளை ஏனைய துறைகளுக்கும் விஸ்தரித்திருந்தது. 

U.H.E லெஷர் பிரைவட் லிமிட்டெட் கீழ் இலங்கையில் வெவ்வெறு பகுதிகளில் விருதுகளை வென்ற சொத்துக்களை பேணி வருகிறது. எல்ல பகுதியில் 98 Acres Resort and Spa மற்றும் யால, கண்டி மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் ‘The Secret Hotels’ தொடரையும் பேணி வருகிறது.