மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத கணவர், சமூக வலைதளத்தில் தனது வித்தியாசமான தற்கொலையை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

யூட்யூபில் தனது செல்லப் ‘பாம்புகளுடன்’ காட்சி நடத்திவந்தவர் பாம்பு நிபுணர் ஆர்ஸ்லான் வலீவ் (31). இவர் தனது மனைவி எக்டரீனா காட்யாவுடன் நடத்தும் பாம்புக் காட்சிகள் யூட்யூபில் பெருவரவேற்புப் பெற்றவை. 

இந்த நிலையில், தன் மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் வலீவ், காட்யாவைக் கடுமையாகத் தாக்கினார். இதனால் காட்யா பிரிந்து சென்றார். 

எனினும், சில தினங்களுக்கு முன் தனது செயலுக்கு வருந்திய வலீவ், பொது இடத்தில் வைத்து தனது தவறுக்காக காட்யாவிடம் மன்னிப்புக் கோரினார்.

எனினும், தனது புதிய காதலருடன் வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகக் கூறிய காட்யா, வலீவுடனான விவாகத்தை இரத்துச் செய்யவும் விண்ணப்பித்தார்.

இதைத் தாங்கிக்கொள்ள முடியாத வலீவ், தனது செல்லப் பிராணிகளுள் விஷம் நிறைந்த ‘மம்பா’ என்ற பாம்பை விட்டுக் கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதுடன் அதை நேரடியாகவும் ஒளிபரப்பியிருந்தார்.