பல வருட காலமாக நிரந்தர நியமனம் இன்றி சேவையாற்றிய தாதியர் உதவியாளர் 66 பேருக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உதவியாளர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுமார் 10 வருட காலமாக நுவரெலிய மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தாதியர் உதவியாளர்களாக தொண்டர் அடிப்படையில் சேவையாற்றி வந்த நிலையில் தங்களுக்கு நியமனம் வழங்கவில்லை என கல்வி இராஜங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே குறித்த நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.