பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் சோதனைக்கு : பிரதி சபாநாயகர் அதிரடி முடிவு : காரணம் யாது.?

Published By: Robert

26 Sep, 2017 | 04:50 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70 வருட பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி விசேட அமர்வு இடம்பெறவுள்ளதன் காரணமாக எதிர்வரும் 2 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகளையும் அவர்களது அலுமாரி, பெட்டகங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் மூன்றாம் திகதி பார்வையாளர் களரிக்கு விசேட விருந்தினர் மாத்திரமே அனுமதிக்கப்படுவதுடன் அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட போக்குவரத்து சேவையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று நண்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் ஆரம்பமானது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு நேரத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்