(ஆர்.யசி)

30 ஆண்டுகால யுத்தத்தை  நிறைவுக்கு கொண்டுவருவதில் கடினமான பாதையில் பயணித்ததை போலவே நல்லிணக்கத்தை  உருவாக்குவதிலும் கடினமான பாதையிலேயே பயணிக்கவேண்டியுள்ளது. விரைவில் நல்லிணக்க தீர்மானம் வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட ஆரம்பித்தால் எதிர்பாராத மோசமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

Image result for மஹிந்த சமரசிங்க

யார் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்த போதிலும் நாம் எமது பயணத்தை முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.