இயக்குநர் சுந்தர் சியின் திரையலக பயணத்தில் மைல்கல்லாக அமையவிருக்கும் படம் சங்கமித்ரா. இதனை அவரே பல முறை தெரிவித்திருக்கிறார். அத்துடன் தன்னுடைய படங்களில் நடிகைகளுக்கும், அவர்களின் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் சுந்தர் சி.

இந்நிலையில் அவரின் கனவு படமான சங்கமித்ராவில், சங்கமித்ராவாக நடிக்க தற்போது பொலிவுட் நடிகை திஷா பற்றானி ஒப்பந்தமாகியிருக்கிறார். 

இவர் ஜேக்கி சான் நடிப்பில் வெளியான ‘குங்பூ யோகா ’என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். அத்துடன் ஹிந்தியிலும், தெலுங்கிலும் நடித்திருக்கிறார்.

சங்கமித்ராவில் கதையின் நாயகியாக நடிக்க நடிகை திஷா பற்றானி நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரியவருகிறது.

இதனிடையே சுந்தர்சியின் வட்டாரத்திலிருந்து வேறு ஒரு தகவலும்வெளியாகியிருக்கிறது. சுந்தர் சியின் இயக்கத்தில் திஷா பற்றானி நடிப்பது உறுதி என்றும். ஆனால் சங்கமித்ராவிற்காக அல்ல என்றும், கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தான் என்று தெரிவிக்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்