ஊறுவிளைவிக்கும் உணவுப்பொருட்களின் இறக்குமதிக்கு தடை ; ஜனாதிபதி

Published By: Priyatharshan

26 Sep, 2017 | 10:55 AM
image

அத்தியாவசியமற்ற உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் அனைத்து உணவு பொருட்களினதும் இறக்குமதியை நிறுத்துவதற்கு தேசிய பொருளாதார பேரவை ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

களுத்துறை போம்புவல சேவைக்கால பயிற்சி நிறுவனத்தின் விவசாய கண்காட்சியை நேற்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந் நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு மட்டும் 2500 கோடிக்கு கூடுதலான பணம் செலவிடப்படுவதாகவும் ஆயிரக் கணக்கான ஆண்டு நாட்டின் பண்பாட்டையும் தனித்துவத்தையும் பாதுகாத்து எமக்குத் தேவையான உணவுப் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியது கட்டாயமானதொன்று.

உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையை வழங்கி அவர்களது பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டுமாயின் எமது பொருட்களுக்கு கூடுதல் பெறுமானம் வழங்க வேண்டும்.  

கடந்த சில மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்து நாட்டின் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை உருவாக்குவதற்காக தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்று நிருபங்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பப்பட்டுள்ளன.

 

உள்நாட்டு வெங்காய விவசாயிகள் முகங்கொடுக்கும் நெருக்கடியை கருத்தில் எடுத்து உடனடியாக செயற்படும் வண்ணம் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நூறு வீத வரியை விதிக்குமாறு நிதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

விவசாய மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரச மற்றும் தனியார் துறையில் உள்ள அனைத்து காணிகளிலும் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதுடன், விவசாயத்தில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பதுடன், விவசாயத்தில் ஈடுபடாதோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

 

சட்டம் மற்றும் அரசியலமைப்பு அமைவாகவன்றி மனிதாபிமான செயலாக கருதி நாட்டின் வறுமையை அகற்றி அனைத்து மக்களினதும் பட்டினியை போக்கும் விவசாய மறுமலர்ச்சியுடன் அனைவரும் இணைந்துகொள்வார்களென நம்புகின்றேன்.

 

அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளினதும் நட்புறவும் ஆசீர்வாதமும் குறைவின்றி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

 

விவசாய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட ஜனாதிபதி ,46 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட போம்புவல சேவைக்கால பயிற்சி நிறுவனத்தின் இருமாடிக் கட்டித்தையும் திறந்து வைத்தார்.

 

'வளமான வாழ்வுக்கு – விவசாயமே பலம் ' எனும் தொனிப்பொருளிலான விவசாய மறுமலர்ச்சி தேசிய திட்டத்தின் கீழ் மேல் மாகாண விவசாய அமைச்சும் மாகாண விவசாய திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சி நாளை வரை இடம்பெறவுள்ளது.

 

இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன், முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, மேல் மாகாண விவசாய அமைச்சர் காமினி திலக்க சிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30