எதிர்­கால உலகின் தலை­வர்­க­ளா­கவும் இந்த உலகை காப்­ப­தற்கு தயா­ராகும் பாது­கா­வ­லர்­க­ளா­கவும் இருப்­ப­வர்கள் சிறு­வர்கள். இள­மையில் கல் சிலையில் எழுத்து எனும் வாக்­கிற்­க­மைய சிறு­வ­ய­தி­லேயே சிறு­வர்கள் வாழும் சூழல் அவர்­களின் எதிர்­கால வாழ்க்­கையில் தாக்கம் செலுத்­து­கி­றது. அதற்­க­மைய உல­க­ளா­வி­ய­ரீ­தி­யிலும் நாட்டிலும் வீட்­டிலும்  ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னைகள் என்­பன அதி­க­ளவில் நேர­டி­யாக சிறு­வர்­க­ளையே பாதிக்­கி­றது. மேலும் சமூ­கத்­தி­லுள்ள சில விச­மி­களின் செயற்­பா­டு­களால் சிறு­வர்கள் பல்­வேறு துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். இந்­நி­லையில் இன்­றைய சிறு­வர்கள் நாளைய தலை­வர்கள்  எனும் நோக்­கோடு அவர்­களை பாது­காப்­ப­தற்கு ஒவ்­வொரு வரு­டமும் ஒக்­டோபர் மாதம் 1 ஆம் திகதி சர்­வ­தேச சிறுவர் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது.  இவ்­வா­றா­ன­தொரு தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­தற்­கான காரணம் சிறு­வர்­க­ளுக்­கெ­தி­ராக அரங்­கேற்­றப்­ப­டு­கின்ற துஷ்­பிர யோகங்­ளையும் அநீ­தி­க­ளையும் இயன்­ற­ளவு குறைத்து அவர்­க­ளுக்­கான சக­ல­வி­த­மான உரி­மை­க­ளையும் பெற்றுக் கொடுப்­ப­தே­யாகும். 

விஞ்­ஞா­னத்தின் அப­ரி­மித வளர்ச்சி நவீன உலகில் மிக நேர்த்­தி­யான முறையில் சௌக­ரி­யங்­களை கண்­டு­பி­டிப்­புக்கள் மூலம்  வழங்கி வரு­கின்­றன. ஆயினும் இவற்றை அனு­ப­விக்கும் மனி­தர்கள் மட்டும் இன்னும் திருப்­தி­ய­டைந்­த­தாக தெரி­ய­வில்லை. மேலும் உல­க­ம­ய­மாக்­க­லி­னாலும் ,நவீன மய­மாக்­க­லி­னாலும், எமது தாய்­மொழி, கலை,கலா­சாரம், பண்­பாடு, மற்றும் பாரம்­ப­ரியம் என்­பன இன்­றைய சந்­த­தி­யினர் முன்­னி­லையில் ஒரு கேள்­விக்­கு­றி­யா­கவே மாறி­யுள்­ளது. மனி­த­னுக்கு இன்­றைய கால­கட்­டத்தில் வாழ்க்கை போராட்­ட­மா­ன­தா­கவும், சவால்கள் நிறைந்­த­தா­கவும், காணப்­ப­டு­கின்­றது. குறு­கிய நேரத்தில் நிறைய வேலை­களை செய்­ய­வேண்டும் என்ற நிர்ப்­பந்­தமும் அவ­ச­ரமும் இதன் விளைவால் உரு­வா­கி­யுள்­ளன.

மேலே குறிப்­பிட்­டது போன்று இன்­றைய தலை­மு­றை­யினர் எதிலும் அவ­சரம், பதற்றம், திருப்­தி­யின்மை ,தாய்­மொழி மற்றும் தமிழ்­க­லா­சா­ரத்தைப் புறக்­க­ணித்தல் என்று வாழ்க்­கையை முழு­மை­யாக வாழாமல் உள்­ளனர்.

"ஐந்தில் வளை­யா­தது ஐம்­பதில் வளை­யுமா" என்­பார்கள். ஆகவே நாம் எமது பிள்­ளை­களை எதிர்­கா­லத்தில் நாம் எதிர்­பார்க்கும் நற்­பி­ர­ஜை­க­ளாக வளர ஐந்து வய­திற்கு முதலே வித்­திட வேண்டும் என்ற தார்­மிக பொறுப்பு பெற்­றோர்கள், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெரி­ய­வர்கள் கரங்­களில் தங்­கி­யுள்­ளது. 

பிள்­ளை­க­ளுக்கு முழு­மை­யான செல்­லத்தை முதல் மூன்று வயது வரை வழங்­கலாம்.அதன் பின்னர் சிறிது சிறி­தாக கட்­டுப்­பா­டு­களை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும். இதுவே பிள்ளை வளர்ப்­பிற்­கான மூல­மந்­தி­ர­மாகும்.

அநேக பெற்றோர் தமது பிள்­ளைகள் பதி­னெட்டு அல்­லது இரு­பது வய­தா­ன­போதும் அவர்கள் சொற்­ப­டியே கேட்டு நடப்­பார்கள். இது ஒரு­சி­றந்த வழி­யல்ல. தமது வீடு­களில் மட்­டு­மல்ல வெளி­யி­டங்­க­ளிலும், தமிழ்­மொழி மூலம் பேச இயன்­ற­வரை பெற்­றோர்கள் முய­ல­வேண்டும். 

தமது கலா­சா­ரத்தை பிள்­ளைகள்  மத்­தியில்  ஊக்­கு­விக்க வேண்டும். வாசிப்பு பழக்­கத்தை சிறு வயது முதல் ஊக்­கு­விக்க வேண்டும்  ஔவை­யா­ரையும், அவ­ரது நீதி­நூல்­க­ளையும், பிள்­ளை­க­ளுக்கு மூன்று வய­தி­லேயே அறி­மு­கப்­ப­டுத்தி தொடர்ந்தும் பின்­பற்றச் செய்­ய­வேண்டும்.

 பெற்­றோ­ரையும், பெரி­யோர்­க­ளையும் மற்றும்  கல்வி புகட்­டிய ஆசான்­க­ளையும், மதித்து அவர்கள் சொற்­படி கேட்டு, நடக்­க­வேண்டும். வயோ­திப காலத்தில் பெற்­றோரை உதா­சீ­னப்­ப­டுத்­தவும், தனி­மைப்­ப­டுத்­தவும் கூடாது.முதியோர் இல்­லத்­திற்கும் அனுப்­பக்­கூ­டாது. ஏனெனில் இப்­படிச் செய்தால் இதனைப் பார்க்கும் உங்கள் பிள்ளை உங்கள் வயோ­திப காலத்தில் உங்­க­ளையும் இவ்­வாறே நடத்த நிறை­யவே இட­முண்டு. 

பெற்­றோர்­களே  இன்­றைய அவ­ச­ர­மான உல­கிலே பொறு­மையைக் கடை­பி­டிக்க உங்கள் பிள்­ளை­க­ளுக்கு கற்றுக் கொடுங்கள் . இப்­போ­தெல்லாம் எல்­லாமே "துரித மயம்". அது உண­வா­கட்டும். புகைப்­ப­ட­மா­கட்டும். எமது கலா­சார உணவு முறை­யையும் சிறு­வ­ய­தி­லேயே அவர்­க­ளுக்கு (பிள்­ளை­க­ளுக்கு) அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும். பிள்­ளை­க­ளுக்கு சிறு­வ­யது முதல் ஒரு கட்­டுப்­பா­டான வாழ்க்கை முறையை போதிக்க வேண்டும். எதிலும் குறை­காணும் பழக்­கத்தை இல்­லாது செய்து நிறை­காணும் மனப்­பக்­கு­வத்தை பிள்­ளை­க­ளுக்கு சொல்லிக் கொடுத்து திருப்­தியை பற்­றியும் போதிக்க வேண்டும். உங்கள் குடும்ப கஷ்­டத்­தையும் பொரு­ளா­தார நிலை­­யையும் அவர்­க­ளுக்கு தெளிவு படுத்த வேண்டும். பணம் ஈட்­டு­வ­தற்­காக நீங்கள் படும் கஷ்­டத்தை அவர்­க­ளுக்கு உணர்த்த  வேண்டும். 

அநேகர் ஒரு செயலைச் செய்தால் அதன் பலனை உட­ன­டியாக அனு­ப­விக்க துடிக்­கின்­றனர். இது தவறு.ஏனெனில் முயற்­சிக்­கேற்ற பலன் அது கிடைக்­க­வேண்­டிய காலத்தில் தான் கிட்டும்.

தோல்­வியை ஏற்­றுக்­கொண்டு அதி­லி­ருந்து பாடங்­களைக் கற்­றுக்­கொண்டு அடுத்த முயற்­சியை மேற்­கொள்­ள­வேண்டும் என்­பதை .கற்­றுக்­கொ­டுங்கள்  

ஆகவே "கட­மையை செய் பலனை எதிர்­பா­ராதே" என்ற எமது முன்னோர் மந்­தி­ரத்­தையும் நாம் பின்­பற்றி எமது பிள்­ளை­க­ளையும் அத­னைப்­பின்­பற்றச் செய்ய வேண்டும். இப்­ப­டிச்­செய்தால் அவர்கள் பொறு­மை­சா­லி­க­ளாக வளர நிறைய வாய்ப்­புண்டு. அதா­வது வெற்றி தோல்­வியை சம­மாகக் கருதப் பழக்க வேண்டும். சிறு­வ­ய­தி­லி­ருந்தே உங்கள் பிள்­ளைகள் குறித்த நேரத்­திற்கு குறித்­த­வே­லையைச் செய்யும் நோக்­குடன் கால அட்­ட­வ­ணையை தயார்­செய்து அவர்கள் பெரி­ய­வர்­க­ளான பின்பும் அந்­த­மு­றையை சுய­மாக பின்­பற்றச் செய்ய வேண்டும்.

உங்கள் பிள்­ளை­களின் நண்­பர்­களை சிறு­வ­யதில் இய­லு­மா­ன­வரை நீங்­களே தெரிந்­தெ­டுக்க வேண்டும். உங்கள் சொல்­கேட்டு நடக்­க­வேண்டும் என்­பதை ஐந்து வய­திற்­குள்­ளேயே பழக்க வேண்டும். 

உங்கள் சம­யத்தை உங்கள் பிள்­ளைகள் கிர­ம­மாக பின்­பற்ற வழி செய்­யுங்கள் இதற்கும் நீங்கள் ஒரு முன்­னு­தா­ர­ண­மாக இருக்க வேண்டும். கிழ­மைக்கு ஒரு நாளா­வது குடும்­பத்­தி­ன­ருடன் மத­வ­ழி­பாட்டு ஸ்தலங்­க­ளுக்கு சென்று வரவும். நிச்­ச­ய­மாக தினந்­தோறும் வீட்டில் தெய்­வ­வ­ழி­பாடு செய்தல் அத்­தி­யா­வ­சி­ய­மாகும். மேலும் சிறு­வ­யது முதலே பிள்­ளை­க­ளுக்கு இலக்­கு­களை வகுத்துக் கொடுப்போம். பெரி­ய­வர்­க­ளா­னதும் அவர்கள் சுய­மாக இலக்­கு­களை நோக்கி வாழ்க்­கையில் பயணிக்க கற்பிப்போம்.

எனவே, எமது பிள்ளைகளை மிகச் சிறந்தமுறையில் வளர்ப்போம். அவர்களுக்கு பொருத்தமானதை பொருத்தமான வயதில் செய்து கொடுப்போம்.அவர்கள் சிறந்த நற்பிரஜைகளாக வளர நாம் சிறந்த முன்னுதாரணமாக திகழுவோம். சிறுவயதிலேயே அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள பழக்குவோம். அவர்களை ஐந்திலே வளையச்செய்து ஐம்பதிலே தரணியாளச் செய்வோம்.இவை  எல்லாம் உங்கள் கைகளில். நாம் அன்று சிறுவர்களாக இருந்தோம். இன்று பெரியவர்கள் ஆனோம் . நாளை முதியவர்கள் ஆவோம் . இதுதான் இயற்கையின் நியதி. இப்படித்தான் நடக்கும். இதுதான் மனித வாழ்க்கை சுற்று வட்டம் என்பதை மறந்து விடக்கூடாது. 

மருதை ரவிந்திரன்

(வாழ்க்கை போதனை மற்றும் சுயமுன்னேற்ற ஆலோசகர்)