ஆகஸ்ட் மாதத்தில் பண­வீக்கம் ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் 7.9 சத­வீ­தத்­திற்கு அதி­க­ரித்து பதி­வா­கி­யுள்­ளது.

அதன்படி ஜூலை மாதத்தில் பதிவு  செய்யப்­பட்ட 6.3 சத­வீ­தத்­தி­லி­ருந்து 1.6 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து  ஆகஸ்ட் மாதத்தில் 7.9 சத­வீ­தத்­திற்கு அதி­க­ரித்­துள்­ளது.

இவ் அ­­தி­க­ரிப்­புக்கு உணவு மற்றும் உண­வ­லலா வகை இரண்டும் முக்­கி­ய­ பங்­க­ளித்தன.அதே போல் ஆண்டுச் சரா­சரி அடிப்­ப­டையில் அள­வி­டப்­பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணில் ஏற்­பட்ட சதவீத மாற்றம் ஜூலை மாதத்தில் 6.2 சதவீ­தத்­தி­லி­ருந்து ஆகஸ்ட் மாதத்தில் 6.5 சத­வீ­தத்­துக்கு அதி­க­ரித்­தது பதி­வா­கி­யுள்­ளது.

மாதாந்த மாற்­றத்தின் அடிப்­ப­டையில் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச்­சுட்­டெண்­ணா­னது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 122.4 சுட்டெண் புள்­ளி­யி­லி­ருந்து 122.3 சுட்டெண் புள்­ளிக்கு வீழ்ச்­சி­ய­டைந்­தது. இம்­மா­தாந்த வீழ்ச்­சிக்கு உணவு வகை­யி­லுள்ள பொருட்­களின் விலை­களில் ஏற்­பட்ட வீழ்ச்­சியே முக்­கிய கார­ண­மாகும். 

இம்­மாத காலத்தில் உணவு வகை­யி­லுள்ள காய்­க­றிகள், சின்­ன­வெங்­காயம், வெள்ளைப்­பூடு, உடன்மீன் மற்றும் அரிசி என்­ப­ன­வற்றின் விலைகள் வீழ்ச்­சி­ய­டைந்­தன. இதே­வேளை, பெரிய வெங்­காயம், சில பழங்கள், தேங்­காய்கள் மற்றும் உரு­ளைக்­கி­ழங்கு என்­ப­வற்றின் விலைகள் இம்­மாத காலத்தில் அதி­க­ரித்­தன.

ஆடை மற்றும் காலணி, தள­பாடங்கள், வீட்­ட­லகுச் சாத­னங்கள், வழ­மை­யான வீட்­டுப்­பேணல் நலன்போக்­கு­வ­ரத்து, கல்வி, பல்­வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத் துறை­களில் விலைகள் அதி­க­ரித்­தன. வீட­மைப்பு, நீர்,மின்­வலு,வாயு, ஏனைய எரி­பொருள் மற்றும் தொடர்­பூட்டல் துணைத் துறை­களில் விலைகள் சிறி­த­ளவால் அதி­க­ரித்­தன. வெறியக்குடி­வ­கைகள் மற்றும் புகை­யிலைத் (பாக்கு) துணை வகை­களின் விலை­களும் ஆகஸ்ட் மாதத்தில் அதி­க­ரி­த்தன.

இதே­வேளை, பொழு­து­போக்கு, கலாச்­சாரம், சிற்­றூண்­டிச்­சாலை மற்­றும் சுற்­று­லா­வி­டுதி போன்ற துணை வகை­களின் விலைகள் மாத காலப்­ப­கு­தியில் மாற்­ற­ம­டை­யாமல் காணப்­பட்­டன.

பொரு­ளா­தா­ரத்தின் அடிப்­படைப் பண­ வீக்­கத்தை பிர­தி­ப­லிக்­கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் ஜூலை மாதத்தில் 4.2 சத­வீ­தத்­தி­லி­ருந்து ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதத்திற்கு அதிகரித்து. ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுடெண் மையப் பணவீக்கம் ஜூலையில் 5.9 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.