இந்தியாவின் ஹார்திக் பாண்டியா மிகவும் சிறப்பான வீரர் என கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இத் தொடரில் 2 ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். 

நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் ஹார்திக் பாண்டியா, 72 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையிலேயே பாண்டியாவை புகழ்ந்து இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

அவரது டுவிட்டரில் 

“இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது, ஹார்திக் பாண்டியா மிகவும் சிறப்பான வீரர். அனைத்து நிலைக்கும் ஏற்ற அணியாக இந்திய அணி உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

சங்காவின் புகழுரைக்கு ஹார்திக் பாண்டியாவும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.