சிங்கப்பூரில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்த தமிழ் குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிங்கப்பூரில் ஆசியா பைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி இடம்பெற்றது.

இதில் பிரதீப் சுப்ரமணியன் என்ற தமிழ் வீரர் பங்கேற்றிருந்தார். இவர் பிரபல வீரர் ஸ்டீவன் லிம் என்பவரை எதிர்கொண்டார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

இதன்போது பலத்த தாக்குதலுக்குள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு செல்லும் போதே அவர் மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.