இத்தாலியின் தலைநகரான ரோமில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெரசினா நகரில் விமான சாகச நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இத்தாலி விமான படைக்கு சொந்தமான யூரோஃபையர் எனும் ஜெட் விமானமே சாகசங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது திடீரென கடலினுள் விழுந்துள்ளது.

குறித்த ஜெட் விமானத்தின் விமானி கடற்படையினரதும் விமானப்படையினரதும் உதவியோடு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விமான விபத்துக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் அந் நாட்டு பாதுகாப்பு பிரிவு விமானப்படையின் தொழிநுட்ப பிரிவின் உதவியோடு விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.