சிங்கள தொலைக்காட்சி நடிகர் தர்ஷன் நிஷான் த சில்வா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், பாடல் காட்சிகளிலும் தோன்றி நடித்துள்ளார்.

பன்னிபிடியவிலுள்ள தனது வீட்டின் அறையில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நிஷானின் வெகு நாள் காதலியோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண நாள் குறித்துள்ள நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இது வரை வெளிவராத நிலையில் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.