மூட்டு வலியா...? இதை தவிர்க்கலாம்..!

Published By: Robert

25 Sep, 2017 | 04:03 PM
image

இன்றைய திகதியில் கொர்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய கம்பனிகளில் வேலைசெய்யும் ஊழியர்களின் பணித்திறன் பாதிக்கபடாமல் இருப்பதில் கவனமுடன் இருக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஊட்டச்சத்து நிபுணர்களை பணிக்கு அமர்த்தி, என்ன சாப்பிடவேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறது.

இது குறித்து ஊழியர்களிடத்தில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவர்களின் பரிந்துரையில் இடம்பெற்ற சில விடயங்கள் கவனத்துக்குரியது தான். அதிலும் குறிப்பாக சிலரின் மூட்டு வலிக்கு காரணமாக திகழும் உணவு பொருள்களின் பட்டியலில் நைட்ஷேட் உணவுப் பொருளுக்கான வகைகள் தவிர்க்கவேண்டும் என்பது ஆய்வுக்குரியது.

நைட்ஷேட் உணவு வகைகள் என்ற பட்டியலில் உருளைக்கிழங்கு அதிலும் குறிப்பாக முளைவிட்ட உருளைக்கிழங்கு, தக்காளி, சிவப்பு மிளகாய் ஆகியவைகளை தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இதற்கான காரணம் குறித்து ஊட்டசத்து நிபுணரான கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது,‘பொதுவாக ஒரு சிலருக்கு மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து மேற்கூறிய உணவுப் பொருள்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு செய்முறைகளில் அல்லாமல், வேறு வகையிலோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால் மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் குணமடையாது. இந்த தாவர வகைகள் அனைத்தும் இரவில் வளர்ச்சியடைவதால் நைட் ஷேடு உணவுப் பொருள்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.

ஆனால் அதிலும் விதிவிலக்குகள் உண்டு. குறிப்பாக முளை விட்ட உருளைக் கிழங்கை வாங்கி அவற்றைப் பொரித்து சாப்பிடுவது, தக்காளி நன்கு பழுக்காத நிலையில் அவற்றை சமையலுக்கு பயன்படுத்துவது, அதிக விதையுள்ள கத்திரிக்காயை பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவது இப்படி செய்யும் போது, அவை உடலில் தீங்கும் விளைவிக்கும் கால்சிட்ரோல் (calcitriol) என்னும் ஹோர்மோனை சுரக்கச் செய்து, தேவைக்கும் அதிகமான கால்சிய சத்தினை உறிஞ்சுவதற்கு தூண்டுகிறது. இதனால் உடலில் உள்ள தோள் மூட்டுகளில் இவை தங்கி வலியை ஏற்படுத்துகிறது.குறிப்பாக ஓர்த்தரைடீஸ் என்ற பாதிப்பை இது ஏற்படுத்துகிறது.

அதற்காக இத்தகைய உணவுப் பொருள்களை முற்றாக தவிர்க்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் இவற்றை அளவுடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகத்தான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் உள்ளவர்கள் மட்டும் இத்தகைய உணவுப் பொருள்களை ஓரளவிற்கு மட்டுமே பயன்படுத்த முன்வரவேண்டும்.’ என்றார்.

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04