கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் பயணிகள் பஸ் வண்டியொன்றின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானை டெக்னிக்கல் சந்திப் பகுதியில் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதால் ஒல்கொட் மாவத்தையில் இருந்து வெளியேறும் பாதையில் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக ஒல்கொட் மாவத்தையை பாவிக்கும் வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.