ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்  தலைவர் என மூன்று பேரும் இருக்கும்போதே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என நான் நம்புகின்றேன் என நிர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஷா தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி நீர்ப்பாசன பிரிவிற்குட்பட்ட சிவத்தப்பாலம் கிரான்புல்சேனை அணைக்கட்டு அமைப்பதற்கான  அடிக்கல்  நாட்டு விழாவில்  கலந்துகொண்ட போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீண்டும் ஒரு யுத்தம் வருவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.  இங்குள்ள அனைத்து இன மக்களும்  அவர்களின் மதங்களுக்கும் அனைத்து பிரதேசத்தில் வாழும்  மக்களும் சுதந்திரமாகவும் சமாதானமாகவும்  வாழுகின்ற வகையில் ஒரு  அரசியல் அமைப்புத் திருத்தம் ஒன்றை செய்வதற்கு எமது ஜனாதிபதி  தலைமையில்  நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதற்கு நல்லதொரு  உதாரணம் எமது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்  தலைவர் என மூன்று பேரும் இருக்கும்போதே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என நான் நம்புகின்றேன்.

இந்த  மக்கள் இன்று மிகவும் சந்தோசமாக இருகின்றார்கள்  அதுதான் இன்று எமது நிர்ப்பாசன  அமைச்சால் நீர் வழங்குவதற்காக 650 மில்லியன்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் 5000 குடும்பங்களுக்கு  விவசாயம்  செய்வதற்கும் அவர்களுடைய  தேவைகளை  பூர்த்தி  செய்வதற்கும் இந்த நீர் திட்டத்தின்  மூலம் நன்மை வழங்க நாம் முன்வந்துள்ளோம்.

நீங்கள்  ஒன்றை  புரிந்துகொள்ள வேண்டும் உங்களுக்கு வழங்கவிருக்கும்  இந்த நீர்  எனது கிராமத்தில்  இருந்ததுதான்  வரபோகின்றது. இந்த விடயம் உங்களது அமைச்சருக்கு தெரியுமோ என்று எனக்குத் தெரியாது.

இலங்கையில் பெரிய குளம் என்று அழைக்கப்படும் சேனாநாயக்க குளம் எனது ஊரில்தான்  இருக்கினறது.  அவர்களுக்கு இதுவரைக்கும் நீர்  வழங்க வில்லை  உங்களுக்கு வழங்குவதற்கு  நான் முன்வந்துள்ளேன்.

இந்த குடிநீர்  திட்டத்திற்கு சிங்களவர் யாரும் எதிர்ப்பு இல்லை அதனால்  நாங்கள்  நம்புகின்றோம் இங்கிருக்கின்ற மூவின  மகளும் ஒன்றிணைத்து செயற்படவேண்டும் வேண்டும். நல்லிணக்கத்தின்  ஊடக  சிறந்த ஒரு இலங்கை திருநாட்டை  கட்டியெழுப்ப வேண்டும் என்பதே இந்த நல்லாட்சியின் குறிக்கோளாக  உள்ளது.

முப்பது  வருடம் யுத்தம் நடந்தது  என்ன நன்மை கிடைத்துள்ளது. எதற்கு சண்டை பிடித்தோம். என்னத்தை பெற்றுள்ளோம். தற்போது சுமுகமான நிலைமை  உள்ளது இங்கு வாழும் மக்கள் எங்கு வேண்டுமென்றாலும் போய் வாழக்கூடிய சுழல் உருவாகியுள்ளது.

ஆகவே மூவின  மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் நாங்கள் போகும் போது எதையும் கொண்டுபோக முடியாது நாம் செய்த நன்மைகளும்  தீமைகளும் மட்டுமே எம்முடன்  வரபோகின்றது என்பதை மறக்க வேண்டாம். 

நாங்கள்  மூவின மக்களும் சேர்ந்ததுதான் இந்த நாட்டை வெள்ளையர்களிடம் இருந்து போராடித்தான்  பெற்றோம். சில காலங்களுக்கு பின் நாம் ஒருவர் ஒருவர் முரண்பட நேர்ந்தது எமது ஒற்றுமையின் பெறுமதியை உணரவில்லை இன மத பேதம் என  நாங்கள்  பிரிந்தோம் பிரிவடைந்தோம் கட்சிகள்  உருவாகியது இதன் மூலமாகத்தான்  இனவாதம்  உருவாகியது.

இந்த நிகழ்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா . சம்பந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.