டொரென்டோ - யாழ்ப்பாணம் கூட்டுறவு மன்றம் எதிர்வரும் சனிக்கிழமை டொரென்டோ நகரில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு டொரென்டோவிலுள்ள மெட்ரோ அரங்கில் இடம்பெறவுள்ளது.

இதன்போது டொரென்டோ - யாழ்ப்பாண தமிழ் சமூகத்திற்கிடையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட டொரென்டோ நகர மேயர் ஜோன் ரொரி இரு நாகரங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக டொரென்டோ மேயரின் பேச்சு, இலங்கையில் டொரென்டோவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பில் விளக்கம், இரு நகரங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் கல்வி, நூலக சேவைகள் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.