சிங்கள மயமாகும் இந்திய வம்சாவளியினர்.!

Published By: Robert

25 Sep, 2017 | 11:33 AM
image

இந்­திய வம்­சா­வளி மக்கள் இந்­நாட்டில் தனித்­துவம் மிக்க ஒரு சமூ­க­மாக விளங்­கு­கின்­றனர். இம்­மக்­களின் கலை, கலா­சார, பண்­பாட்டு விழு­மி­யங்கள் சிறப்­பா­ன­தா­கவும், முக்­கி­யத்­துவம் மிக்­க­ன­வா­கவும் காணப்­ப­டு­கின்­றன. இது தொடர்பில் வெளிநாட்­ட­வர்­களே பல சம­யங்­களில் வியந்து பாராட்டி இருக்­கின்­றனர். நிலைமை இவ்­வா­றி­ருக்க இந்­திய வம்­சா­வளி மக்­களில் சிலர் தமது தனித்­து­வத்­தையும், சிறப்­புக்­க­ளையும் உண­ராது மெதுமெது­வாக பௌத்த கலா­சா­ரத்தை பின்­பற்றி சிங்­கள மய­மாகும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக புத்­தி­ஜீ­விகள் விசனம் தெரி­விக்­கின்­றனர். இதனால் பல்­வேறு பாத­க­மான விளை­வுகள் ஏற்­படும் என்றும் இவர்கள் மேலும் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். 

பத்­தொன்­பதாம் நூற்­றாண்டில் உலகின் பல்­வேறு பாகங்­க­ளுக்கும் பூரண அடி­மை­க­ளா­கவும் அரை அடி­மை­க­ளா­கவும் கூலி­க­ளா­கவும் தமிழ்த் தொழி­லா­ளர்கள் தமி­ழ­கத்தில் இருந்து பண்­டங்­களைப் போன்றோ மந்­தை­களைப் போன்றோ கப்­பல்­களில் ஏற்­றப்­பட்டு குடி­ய­மர்த்­தப்­பட்­டனர். அக்­கா­லப்­ப­கு­தியில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்­டி­யிலே தீவி­ர­மாக ஈடு­பட்ட பிரித்­தா­னி­யி­ன­ரதும், பிரான்­சி­ய­ரதும் ஆதிக்­கத்தில் இருந்த நாடு­க­ளிலும், தீவு­க­ளி­லுமே தமிழ்த் தொழி­லா­ளர்கள் அதி­க­மான அளவில் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். 

இவ்­வாறு குடி­ய­மர்த்­தப்­பட்ட நாடு­களும், தீவு­களும் நாற்­ப­துக்கும் மேற்­பட்­டவை. எனினும், இது­வரை யாரும் சரி­யான முறையில் கணக்­கிட்­டுள்­ள­தாக தெரி­ய­வில்லை என்று கலா­நிதி க.அரு­ணா­சலம் தனது நூல் ஒன்றில் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். இத­ன­டிப்­ப­டையில் நேவீஸ், அன்ரீல்ஸ், நியூ­க­லி­டோ­னியா, பிஜி, டேமாரா, மொரீ­சியஸ், றியூ­னியன், தென் ஆபி­ரிக்கா, வியட்நாம், அந்­தமான், சுமாத்­திரா, சிசெல்ஸ், சென்ற்­லூ­சியா, பர்மா, சிங்­கப்பூர், மலே­சியா, உள்­ளிட்ட பல நாடு­க­ளிலும், தீவு­க­ளிலும் தமிழ் மக்கள் தமி­ழ­கத்தில் இருந்து அழைத்துச் செல்­லப்­பட்டு குடி­ய­மர்த்­தப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. 

இவ்­வாறு அழைத்துச் செல்­லப்­பட்ட தமிழ் மக்கள் அர­சியல், பொரு­ளா­தார, சமூக ரீதி­யாக அடக்கி ஒடுக்­கப்­பட்டு பிரித்­தா­னிய, பிரான்­சிய ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும், அந்­தந்த நாடு­க­ளையும், தீவு­க­ளையும் சேர்ந்த சுதேச இனத்­த­வர்­க­ளாலும் பல்­வேறு சுரண்­டல்­க­ளுக்கும் உள்­ளாகி இருக்­கின்­றனர். இந்த சுரண்­டல்­களும் அடக்கு முறை­களும் இன்னும் கூட ஓய்ந்­த­பா­டில்லை. தொடர்ந்து கொண்டே இருக்­கின்­றன. இந்த வகையில் 19ஆம் நூற்­றாண்டில் இடம்­பெ­யர்ந்த ஒரு தொகை­யினர் தமி­ழ­கத்தில் இருந்து அழைத்து வரப்­பட்டு இலங்­கையின் மலை­யகப் பகு­தி­க­ளிலும் குடி­ய­மர்த்­தப்­பட்­டனர். 

இவ்­வாறு குடி­ய­மர்த்­தப்­பட்­ட­வர்கள் நீண்­ட­கா­ல­மாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு சமூ­க­மா­கவே வாழ்க்கை நடத்தி வந்­துள்­ளனர். எனினும், இந்­நி­லையில் இப்­போது சற்று மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­த­னையும் கூறி­யாதல் வேண்டும். தமிழ் மக்கள் குடி­ய­மர்த்­தப்­பட்ட நாடுகள் மற்றும் தீவுகள் பல­வற்றில் தமிழ் தொழி­லா­ளர்கள் பலர் இன்று தமிழ் பேசவோ, எழு­தவோ அன்றேல் வாசிக்­கவோ முடி­யாத நிலையில் இருந்து வரு­வ­தா­கவும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். 

மேலும் தமிழ் தொழி­லா­ளர்கள் அதி­க­ளவில் சுதேச இனத்­த­வர்­க­ளுடன் கலப்­புற்று விட்­ட­தா­கவும் அவ்­வாறு கலப்­புற்ற நிலையில் அவர்கள் பெரு­ம­ளவு உரி­மை­க­ளு­டனும் சலு­கை­க­ளு­டனும் ஓர­ளவு வளத்­து­டனும் வாழ்ந்து வரு­வ­தா­கவும் புத்­தி­ஜீ­விகள் மேலும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­மையும் இங்கு நோக்­கத்­தக்க விட­ய­மா­க­வுள்­ளது. 

தமி­ழ­கத்தில் இருந்து அழைத்து வரப்­பட்ட தமிழ் மக்­களின் சந்­த­தி­க­ளாக இந்­திய வம்­சா­வளி மக்கள் இப்­போது இலங்­கையில் வாழ்ந்து வரு­கின்­றனர். மலை­யக பகு­தி­களில் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் பெரு­ம­ளவில் வாழ்­வதும் தெரிந்த விட­ய­மாகும். இந்­திய வம்­சா­வளி சமூ­கத்­தினர் இந்த நாட்டில் தனித்­துவம் மிக்­க­வர்­க­ளாக உள்­ளனர். இவர்­களின் முக்­கி­யத்­துவம் கருதி தனித்­தே­சிய  இன­மாக இம்­மக்­களை அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்­கிற கோஷங்­களும் கோரிக்­கை­களும் இப்­போது நாளு­க்கு நாள் வலு­வ­டைந்து வரு­கின்­றன. இந்­திய வம்­சா­வளி மக்கள் இந்த நாட்டில் பல்­வேறு சவால்­க­ளையும், நெருக்­க­டி­க­ளையும் எதிர்­கொண்­டார்கள். எனினும், அம்­மக்­களின் கலை, கலா­சார நட­வ­டிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்­தன. அதன் முக்­கி­யத்­து­வத்­தினை உணர்ந்து அம்­மக்கள் செயற்­பட்­டார்கள் என்­ப­தனை இதி­லி­ருந்து புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 

எனினும், அண்மைக்கால­மாக இந்­நி­லை­மை­களில் சில தொய்­வுகள் ஏற்­பட்டு வரு­வ­தாக புத்­தி­ஜீ­விகள் விச­னப்­பட்டுக் கொள்­கின்­றனர். இந்­திய வம்­சா­வ­ளி­யினர் சிலர் வலிந்து சிங்­கள மொழி­யினை பேச முனை­வ­தையும், பௌத்த கலா­சா­ரத்­தின்­படி நடந்­து­கொள்ள முனை­வ­தையும் சிங்­க­ளவர் பாணியை பின்­பற்றி ஏனைய பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முனை­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. தமி­ழர்கள் சிங்­களம் பேசு­வதால் சிங்­க­ளவர் ஆகி­விட முடி­யாது. சிங்­களம் பேசும் தமி­ழர்கள் என்றே சிலர் அழைக்­கப்­ப­டுவர் என்றும் கருத்­துக்கள் இது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இந்­நி­லையில் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் சிலரின் சிங்­கள மய­மாகும் முயற்­சி­யா­னது பல்­வேறு பாத­க­மான விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும் என்றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இன அடை­யாளம் என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். ஒவ்­வொரு சமூ­கத்­தி­னரும் தத்­த­மது இன அடை­யா­ளத்தைப் பேணி பின்­வரும் சந்­த­தி­களும் இதனை கைக்­கொள்ள நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். கலை, கலா­சார, பண்­பாட்டு விழு­மி­யங்கள் இதில் முக்­கிய இடம் பெறு­கின்­றன. இதனை விடுத்து நாம் கலா­சார மீறல்­களில் ஈடு­ப­டு­வோ­மாக இருந்தால் அதன் விளை­வு­க­ளையும் நாமே அனு­ப­விக்க வேண்டி நேரிடும் என்­ப­தையும் மறந்து விடுதல் ஆகாது. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் சிங்­கள மய­மாக்க முயலும் நட­வ­டிக்­கையை கண்­டித்து புத்­தி­ஜீ­விகள் பலர் தமது நிலைப்­பா­டு­க­ளையும் தெளி­வு­ப­டுத்­தினர். இவர்­களின் கருத்­து­களை எமது கேசரியின் வாச­கர்­க­ளுக்­காக இதன்கீழ் தொகுத்து தரு­கின்றேன்.

பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் 

சிறு­பான்மை மக்­களை ஒன்று கலக்­கின்ற கொள்கை என்­பது பல நாடு­க­ளிலும் இருந்து வந்­துள்­ளது. 1950 மற்றும் 1960 களில் இந்த சிந்­தனை வலு­வ­டைந்து காணப்­பட்­டது. அவுஸ்­தி­ரேலியா மற்றும் அமெ­ரிக்கா போன்ற நாடு­களில் இது தீவி­ர­ம­டைந்து காணப்­பட்­டது. ஆனால், இந்த நிலைமை இன்று மாறிப்போய் இருக்­கின்­றது. இந்த வகையில் இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் தமி­ழர்கள் எல்­லோரும் சிங்­க­ள­வர்­க­ளாக மாற வேண்டும் என்று அர­சாங்க கொள்கை எதுவும் கிடை­யாது. மேலை நாடு­களில் அப்­படி ஒரு கொள்கை காணப்­பட்­ட­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும். மேலை நாடு­களில் பன்மை கலா­சா­ரத்தின் அடிப்­ப­டையில் ஒவ்­வொரு இனத்­த­வரும் தத்­த­மது கலா­சா­ரத்தை பேணும் வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வாய்ப்­புகள் பலவும் வழங்­கப்­பட்­டன. இதனை பன்மை கலா­சாரம் என்று நாங்கள் குறிப்­பி­டு­கின்றோம். ஆனால், இலங்­கையை பொறுத்த வரையில் எமது இந்­திய வம்­சா­வளி மக்கள் வலிந்து சிங்­கள பாணியில் செல்லத் தொடங்­கு­கின்­றனர். இதற்­கான காரணம் என்­ன­வென்று எனக்கு சரி­யாக தெரி­ய­வில்லை. சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. இதன் பாதக விளை­வுகள் எங்கே போய் முடியும்? எப்­படி முடியும்? என்று தெரி­யாது. எம்­ம­வர்கள் வலிந்து சிங்­கள கலா­சா­ரத்­தையும், பாணி­யையும் பின்­பற்றும் நிலையை சிலர் மறுத்து கருத்­து­களை தெரி­விக்­கக்­கூடும். ஆனால், உண்மை அது­வல்ல. 

இந்­திய வம்­சா­வ­ளி­யினர் மிகச் சிறந்த பண்­பாட்டு, கலா­சார விழு­மி­யங்­களை கொண்­டுள்­ளனர். தமி­ழக மக்­களின் தொடர் நிலை­யாக இது இருக்­கின்­றது. எனினும் நாம் இப்­போது இந்­திய தமி­ழர்கள் என நினைத்துக் கொண்டு தமி­ழகம் செல்­கின்­ற­போது அவர்கள் எம்மை மாற்றுக் கண் கொண்டு நோக்­கு­வ­தையும் கூறி­யாக வேண்டும். இதற்கு காரணம் இலங்கை நாட்டு பெரும்­பான்மை கலா­சாரம் எமக்கு மறை­மு­க­மாக இருக்­கின்­றது என்­பதே பொரு­ளாகும். பேச்சு வார்த்­தைகள், நடை­மு­றைகள், வாழ்க்கை முறை இவை­களை நோக்­கும்­போது ஏதோ ஒரு வித்­தி­யாசம் தென்­ப­டு­கின்­றது. பெரும்­பான்மை கலா­சா­ரத்தின் பாதிப்பு இதில் உள்­ள­தாக கொள்ள முடியும். பெரும்­பான்மை கலா­சா­ரத்தை நாங்­க­ளாக வலிய சென்று ஏற்­றுக்­கொண்ட ஒரு நிலை­யா­கவும் இது இருக்­கக்­கூடும். பெரும்­பான்மை கலா­சாரத் தழுவல் கார­ண­மாக நாம் எமது மொழியை மறக்­கின்றோம்; கலா­சா­ரத்தை மறக்­கின்றோம். பண்­பாட்டு, சடங்­குகள் இவை எல்­லா­வற்­றையும் மறக்­கின்றோம்.  எமது பாணி ஒரு வித்­தி­யா­ச­மான மாறு­பட்ட பாணி­யாக அமை­கின்­றது. இப்­படி செல்­வதன் கார­ண­மாக எவ்­வித பிர­யோ­ச­னமும் கிடை­யாது. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் சிங்­க­ள­வர்­களின் பாணியை பின்­பற்­று­வதால் சிங்­க­ள­வ­ராக ஆகி­விட முடி­யாது. நாம் என்­னதான் பேசி நடித்­தாலும் எமது பரம்­ப­ரை­யினர் தமி­ழர்கள் என்­பது அவர்­க­ளுக்கு தெரியும். தமி­ழர்கள் சிங்­கள பாணியில் மாறி­னாலும் அவர்­களை வேறு ஒரு ஜாதி­யி­ன­ராக வைத்­தி­ருப்­பது இலங்­கை­யரின் வழக்­க­மாக உள்­ளது. இலங்­கையின் மேற்கு புறத்தில் உள்­ள­வர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்­த­வர்­களில் சில­ரா­கவும் உள்­ளனர். இவர்கள் வெவ்­வேறு சாதிப்­பெயர் கொண்டு அழைக்­கப்­பட்டு வரு­கின்­றனர். சாதியை சொன்­ன­வுடன் இவர்கள் தமிழ் பரம்­பரை என்­ப­தனை ஏனையோர் விளங்­கிக்­கொள்வர். 

மலை­யக தலை­வர்கள், புத்­தி­ஜீ­விகள் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து எமது கலா­சா­ரத்தை பேணு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். மற்­றைய கலா­சா­ரங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வண்ணம் பார்த்துக் கொள்­ளவும் வேண்டும். மலை­ய­கத்தில் உள்ள சில சமூ­கத்­தினர் இந்­திய பழக்­க­வ­ழக்­கங்­களை திட்­ட­வட்­ட­மாக கையா­ளு­கின்­றனர். இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் சடங்­குகள், கிரி­யைகள் என்­ப­வற்றை நன்­றாக தெரிந்­த­வர்கள் பலர் ஏற்­க­னவே இந்­தியா சென்­று­விட்­ட­தாக சமூக ஆய்­வாளர் ஒருவர் என்­னிடம் தெரி­வித்தார். இந்­நி­லைமை பிழை­யான வழி­ந­டத்­தல்­க­ளுக்கு உந்து சக்­தி­யாகி உள்­ளது. மட்­டக்­க­ளப்பில் விபு­லா­னந்தர் கல்­லூ­ரியைப் போல மலை­ய­கத்தில் ஒரு கல்­லூரி இல்லை. எனவே எமது கலா­சாரம் சம்­பந்­த­மான கல்­லூ­ரிகள் நிறு­வ­னங்கள் என்­பன மிகவும் தேவை­யாக உள்­ளன. 

இவற்­றை­யெல்லாம் மேற்­கொள்ள எம்­மிடம் ஒரு தனி­யான பல்­க­லைக்­க­ழ­கமும் கிடை­யாது. இத்­த­கைய விட­யங்­களை கருத்தில் கொண்டே நான் தனி­யான பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் அடிக்­கடி வலி­யு­றுத்தி வரு­கின்றேன். உரி­ய­வர்கள் இதனை இனி­யா­வது விளங்­கிக்­கொண்டு ஆவன செய்தால் மகிழ்ச்­சி­ய­டைவேன். மலை­ய­கத்தில் ஒரு இசைக்­கல்­லூ­ரியை உரு­வாக்க வேண்டும் என்ற முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இது மகிழ்ச்­சிக்­கு­ரி­யதே. 

மலை­யக இளை­ஞர்கள் மத்­தியில் ஒன்று கலக்கும் தன்மை அதி­க­மா­கவே உள்­ளது. நமது கலா­சாரம் குறித்த விழிப்­பு­ணர்வு இல்­லா­மையே இதன் பிர­தான கார­ண­மாகும் என்று கரு­து­கின்றேன். ஏனைய கலா­சா­ரங்­களை பின்­பற்­று­வதால் ஒரு நன்­மையும் ஏற்­ப­டாது என்­ப­தனை இவர்கள் விளங்கிக் கொள்ளுல் வேண்டும். நான் எவ்­வ­ள­வுதான் ஆங்­கிலம் பேசி­னாலும் நான் ஆங்­கி­லே­ய­னா­கவோ வெள்­ளைக்­கா­ர­னா­கவோ மாற முடி­யாது. எனது பெயரும் என்னை காட்டிக் கொடுத்து விடும். ஏனைய மொழி­களை படிப்­பதும் ஏனைய கலா­சா­ரங்­களை தெரிந்து வைத்­தி­ருப்­பதும் சிறப்­பான விட­ய­மே­யாகும். அதற்­காக ஒன்று கலப்­பது என்­பது எவ்­வி­தத்­திலும் நியா­ய­மாகி விட மாட்­டாது. எமது மக்­க­ளுக்கு மிக நீண்ட வர­லாறு இருக்­கின்­றது. இது பல்­துறை சார்ந்த ஒரு வர­லாறு ஆகும். இதை மறந்து இன்­னொரு கலா­சா­ரத்தை பின்­பற்ற வேண்­டிய அவ­சியம் இல்லை. மலை­யக தலை­வர்கள் தாய் மொழிக்கு முக்­கி­ய­மான இடத்­தினை வழங்கி செயற்­பட வேண்டும். தமிழ் மொழி தேவை­யில்லை என்­கிற உணர்வு தமி­ழர்­க­ளுக்கே இருப்­பது மிகவும் வருந்­தத்­தக்க ஒரு விட­ய­மாகும். தமிழ் அர­ச­க­ரும மொழி என்று அர­சி­ய­ல­மைப்பு கூறு­கின்­றது. 

நிலைமை இவ்­வாறு இருக்­கையில் நாம் தமிழை பின்­பற்­றாது வேறு யார் தமிழை பின்­பற்­றப்­போ­கின்­றார்கள் என்று ஒரு கேள்வி எழு­கின்­றது. நாமே எமது மொழியை கைவி­டக்­கூ­டாது. கலா­சா­ரத்தை கைவி­டக்­கூ­டாது. முஸ்லிம் சகோ­த­ரர்கள் சிலர் தமி­ழையும் இன்னும் சிலர் சிங்­க­ளத்­தையும் பேசு­கின்­றனர். இந்­நி­லையில் தமிழ்ப் பேசும் முஸ்­லிம்கள் சிங்­களம் பேசும் முஸ்­லிம்கள் என்று பிரி­வுகள் இரண்டு உரு­வா­கலாம் என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். நாம் அவ்­வ­ளவு தூரத்­துக்கு இல்­லா­விட்­டாலும் அதனை நோக்கி செல்­கின்­றோமோ என்ற சந்­தேகம் மேலெ­ழும்­பு­கின்­றது. சிங்­களம் பேசும் தமி­ழ­ராக நாம் மாற முற்­ப­டக்­கூ­டாது. அமெ­ரிக்­காவில் மொழிப்­பி­ரச்­சினை இல்லை. கறுப்­பினம், வெள்­ளை­யினம் என்ற இனப்­பி­ரச்­சி­னையே உள்­ளது. இரு­வரும் ஒரே மொழி­யையே பேசு­கின்­றனர். மொழியை மாற்­றி­னாலும் இனத்தை மாற்­றிக்­கொள்ள முடி­யாது. 

கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஸ் 

ஒரு சமூகம் இன்­னொரு சமூ­கத்தை பின்­பற்றி அந்த சமூ­க­மாக மாறும் நிலைமை உலகில் நிகழ்ந்­துள்­ளது. பல சமூகங்­க­ளுக்கு இடையில் இது நிகழ்ந்­துள்­ளது. பெரும்­பான்மை இனத்­துக்கு மத்­தியில் ஒரு சிறு­பான்மை இனம் இருக்­கும்­போது சிறு­பான்மை இன­மா­னது பெரும்­பான்மை இனத்தை போன்று தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டு காரி­ய­மாற்றும் நிலைமை இலங்­கை­யிலும் நிகழ்ந்­துள்­ளது. 

தென்­ப­கு­தியில் உள்ள சலா­கம போன்ற இடங்­களில் உள்­ள­வர்கள் 13 ஆம் நூற்­றாண்டில் இலங்­கைக்கு வந்த தென்­னிந்­தி­யர்­க­ளாவர். இவர்கள் பிற்­கா­லத்தில் செல்வம் மிக்க சமூ­க­மாக எழுச்சி பெற்­றுள்­ளனர். இந்­நி­லையில் இன்று மலை­யக பகு­தியில் உள்ள இந்­திய வம்­சா­வ­ளி­யினர் சிலர் சிங்­கள பாணியை பின்­பற்றி அவர்­க­ளது வாழ்க்கை முறை­களை பின்­பற்றி சிங்­க­ள­வ­ராகும் முயற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இவர்கள் தங்­க­ளது வீடு­களில் உள்ள உறுப்­பி­னர்­க­ளி­டையே சிங்­க­ளத்தில் பேசிக்­கொள்­கின்­றனர். மகன், மகள் போன்­றோரை புத்தா, துவ என்­கின்­றனர். அப்பா, அம்­மாவை பார்க்க ஊருக்கு போகின்றோம் என்­ப­தற்கு பதி­லாக ‘மகா­கெ­தர’ இற்கு போகின்றோம் என்று கூறு­கின்­றனர். 

கொழும்பில் சில இடங்­களில் வரு­டாந்தம் இறந்­த­வர்­க­ளுக்கு செய்யும் திவசம் போன்ற நட­வ­டிக்­கை­களை தான­கெ­தர என்ற பெயரில் மேற்­கொள்­கின்­றனர். இரத்­தி­ன­புரி, காலி, மாத்­தறை போன்ற பகு­தி­களில் உள்ள தமிழ் பெண்­களில் பெரும்­பா­லானோர் சிங்­கள பெண்கள் அணியும் உடை­யினை அணிந்து கொண்­டுள்­ளனர். இளை­ஞர்கள் தங்­க­ளது பெயரை சிங்­கள பெயர்­போன்று கூறும் பாங்கும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும். உதா­ர­ண­மாக ராஜன் மதுஷன் மது­ரங்க போன்ற பெயர்­களை குறிப்­பி­டலாம். 

சிங்­கள இன­மாக காட்டிக் கொள்ளும் பொருட்டு இந்­ந­ட­வ­டிக்கை இடம்­பெ­று­கின்­றது. மலை­யக திரு­மண வைப­வங்­களில் தமிழ் முறையில் உண­வுகள் பரி­மா­றப்­ப­டு­வ­தனை பெரும்­பாலும் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை. பருப்பு, பலாக்காய், மிளகாய், பொரியல், நெத்­தலி, கரு­வாடு, கோழி, மீன் இதுதான் இன்று விருந்­துக்கு வைக்­கப்­ப­டு­கின்­றது. இரசம் ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்­கின்­றது. இந்தப் பழக்கம் எங்­கி­ருந்து வந்­தது. இது தமிழ் உணவு இல்­லையே. சில தமிழ் இளை­ஞர்கள் மூன்று வேளையும் சோறு சாப்­பி­டு­வ­தாக கூறு­கின்­றார்கள். இத்­த­கையோர் இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவு வகை­களை இழி­வாக கரு­து­கின்­றனர். பால் சோறு என்­ப­தனைக் கூட இப்­போது தமிழில் யாரும் அதி­க­மாக கூறு­வது கிடை­யாது. கிரிபத் என்றே சிங்­க­ளத்தில் எம்­ம­வர்கள் அழுத்திக் கூறு­கின்­றார்கள். காய்­க­றி­களை கொள்­வ­னவு செய்­கை­யிலும் சிங்­க­ளத்­தி­லேயே அதி­க­மாக பேசப்­ப­டு­கின்­றது. ராபு, முருங்கா, வட்­டக்கா, இப்­ப­டித்தான் நிலைமை செல்­கின்­றது. ஆசி­ரி­யர்கள் கூட சிங்­கள ஆதிக்­கத்­துக்கு உட்­பட்­டுள்­ளார்கள். கொடுப்­ப­னவு என்­ப­தற்கு பதி­லாக ‘கெவீம’ என்றே இவர்கள் அதி­க­மாக கூறு­கின்­றார்கள். சாதா­ரண பேச்சு வழக்கில் கூட அவ­சரம் என்­ப­தற்கு பதி­லாக ‘அதி­சிய’ என்ற சிங்­கள சொல்­லையே பெரிதும் எம்­ம­வர்கள் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

வீட்டை ‘அஸ்’ பண்ண வேண்டும். என்­கின்­றனர். ‘பிட்ட பிட்ட’ அனி­வா­ரய போன்ற பல சொற்கள் சிங்­கள மொழியில் இருந்து தமிழர் கையா­ளு­கின்­றனர். ‘பட்ட’, ‘பெம்ம’, ‘தட­கொ­லய’ போன்ற சொற்­க­ளையும் குறிப்­பி­டலாம். பழ­மொ­ழி­களைக் கூட சிங்­க­ளத்தில் உள்ள பழ­மொ­ழி­க­ளையே கூறு­கின்­றனர். தமி­ழர்கள் சிங்­களம் பேசி சிங்­க­ளப்­பா­ணியை பின்­பற்­று­வதால் சிங்­க­ள­வர்கள் உயர்­கு­லத்தில் எம்­ம­வர்­களை இணைத்துக் கொள்ள மாட்­டார்கள். ஆகக்­கு­றைந்த அடி­மட்ட குலத்­தி­லேயே எம்­ம­வர்­களை சேர்த்துக் கொள்­வார்கள்.

 இந்­தியத் தமிழர், இலங்கை தமிழர் என்று கூறிக்­கொள்­வார்கள். இந்­தியத் தமிழர், இலங்கை தமிழர் என்று கூறிக்­கொள்­வதால் மிகவும் குறைந்த சமூகக் கட்­ட­மைப்­பி­லேயே இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்கள் உள்­வாங்­கப்­ப­டுவர் என்­ப­தையும் நினைவு கூர விரும்­பு­கின்றேன். இன அடை­யாளம், தனித்­துவம், தமிழ் மரபு என்­ப­வற்றை தக்­க­வைக்க எம்­ம­வர்கள் முற்­ப­டுதல் வேண்டும். தோட்­டங்­களில் நல்ல நிலையில் இருந்து கலை கலா­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­வர்கள் ஒப்­பந்­தத்­திற்­க­மைய இந்­தி­யா­வுக்கு சென்­று­விட்­டார்கள். இதனால் எஞ்­சி­யி­ருந்த மக்­களால் முறைப்­படி கலை கலா­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டது. இந்த ஸ்தம்­பித நிலை பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. நாடகம், பஜனை என்­ப­னவும், கூத்­து­களும் முறை­யாக இடம்­பெ­ற­வில்லை. பழைய மர­புகள் இல்­லாது போயின. இந்த நிலையில் இருந்தும் மீள்­வ­தற்கு மிக நீண்­ட­காலம் எடுத்­தது. எனினும் இன்னும் இது முழுமை பெற­வில்லை. தமி­ழர்கள் தமி­ழ­ராக வாழ்­வ­தற்கு கற்­றுக்­கொள்ள வேண்டும். இந்த நட­வ­டிக்­கையே நன்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும் என்­ப­தனை மறந்து செயற்­ப­ட­லா­காது. 

இரா.ரமேஷ் (சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர்)

பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் 

மலை­யக மக்கள் பரந்தும் செறிந்தும் வாழ்­கின்­றனர். பரந்து வாழும் தென்­னி­லங்கை தமிழ் மக்கள் நாட்டில் இடம்­பெற்ற யுத்த சூழல் கார­ண­மாக அச்­சத்­துக்குள் தள்­ளப்­பட்­டனர். இவர்­களின் சமூகப் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­னது. அர­சியல் பிர­தி­நி­தித்­து­வ­மின்மை, சிறிய எண்­ணிக்­கை­யான குழு­வாக வாழ்ந்­தமை, சிங்­கள கிரா­மங்­க­ளுக்கு மத்­தியில் தோட்­டங்கள் இருந்­தமை போன்­றன இவர்­களின் பாது­காப்­பினை ஆபத்­திற்குள் தள்­ளி­யது. 

பெரும்­பான்மை ஆதிக்­கத்­திற்கு மத்­தியில் யுத்த சூழலில் இவர்­க­ளினால் நிம்­ம­தி­யாக வாழ முடி­ய­வில்லை. பல்­வேறு அடக்கு முறை­க­ளுக்கும் இவர்கள் உள்­ளா­கினர். இதற்­கி­டையில் இம்­மக்கள் தமது மனித பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது. மனித மற்றும் சமூக பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் இவர்கள் தமது அடை­யா­ளங்­களை படிப்­ப­டி­யாக இழக்க வேண்­டியும் நேர்ந்­தது. தமது தனித்­து­வத்தை இழக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டார்கள். தென்­னி­லங்கை மலை­யக தமி­ழர்கள் குறித்து மலை­யக அர­சி­யல்­வா­திகள் அக்­கறை காட்­ட­வில்லை. மலை­யக அர­சியல் மத்­திய மாகா­ணத்தை மையப்­ப­டுத்­தியே காணப்­பட்­டது. 

தென்­னி­லங்கை மக்கள் பாதிப்­பிற்கு உள்­ளா­ன­போது மலை­யக அர­சி­யல்­வா­தி­களின் பதில்கள் திருப்­தி­ய­ளிக்­க­வில்லை. அர­சாங்கம் உரிய பாது­காப்­பினை இவர்­க­ளுக்கு வழங்­க­வில்லை என்­பதும் கசப்­பான உண்­மை­யாகும். அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­ததால் தென்­ப­குதி தமிழ் மக்கள் பாது­காப்­பில்­லாது அச்­சத்­துடன் வாழ்ந்­தனர். இத்­த­கைய பல நிலை­மைகள் தென்­னி­லங்கை இந்­திய வம்­சா­வளி மக்கள் அடை­யா­ளத்தை இழந்து இரட்டை நிலை வாழ்க்­கையை மேற்­கொள்ள ஏது­வா­கின. முழு­மை­யாக தன்னை தமி­ழ­னாக காட்­டிக்­கொள்ள முடி­யாத சூழல் இவர்­க­ளுக்­குள்­ளது. காலி, மாத்­தறை, களுத்­துறை போன்ற பகு­தி­களில் வாழும் எம்­ம­வர்­களின் நிலை இது­வாகும். இரத்­தி­ன­புரி கேகாலை மாவட்­டங்­க­ளிலும் இப்­போது இந்­நிலை காணப்­ப­டு­கின்­றது. ஆங்­கி­லத்தில் இதனை எசி­மி­லேசன் (Assimilation) என்று

 குறிப்­பி­டு­கின்­றனர். மனித ஆய்­வா­ளர்கள் இனச்­சுத்­தி­க­ரிப்பு என்­ற­வாறு நிலை­மை­களை நோக்­கு­கின்­றார்கள்.

நல்­லி­ணக்கம், சமா­தானம், மனித உரிமை பற்றி இப்­போது பேசப்­ப­டு­கின்­றது. இந்த இலக்­கினை அடை­வ­தற்கு நாட்டில் இனங்­க­ளுக்கு இடையில் ஒரு­மைப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­படல் வேண்டும். ஒரு இனத்தின் தனித்­து­வத்தை இழக்கச் செய்து ஐக்­கிய மிக்க நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. பல­நா­டுகள் இதற்கு உதா­ர­ண­மா­கி­யுள்­ளன. தென்­னி­லங்கை தமிழ் மக்கள் இன அடை­யா­ளத்­துடன் வாழ ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். சம­கால மலை­யக தலை­வர்கள் இதனை கவ­னத்தில் கொள்ள வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் நிலையில் இம்­மக்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்­து­வது மிகவும் அவ­சி­ய­மாகும். 

பழ­னி­முத்து ஸ்ரீதரன் 

(வலய கல்விப் பணிப்பாளர், ஹட்டன்)

இனத்துவ அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் மொழி  முக்கிய இடம் வகிக்கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் பல மொழிகளையும் கற்றுக்கொள்வது நல்லது. எனினும் தாய்மொழியை புறக்கணிக்கக்கூடாது. தமிழ்மொழியை புறக்கணித்து சிங்கள மயமாக முற்படுவதன் காரணமாக எமது இனத்துவ அடையாளம் பறிபோகும் அபாயம் உள்ளது. சமூகமும் தடமிழக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும். தாய்மொழியை கல்வி கற்றவர்கள் கூட புறக்கணித்து வருகின்றனர். இது பாதக விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ் மொழிக்கு அந்தஸ்தினை ஏற்படுத்தும் நோக்கில் பல நிகழ்வுகள் பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. எனினும் தமிழை புறக்கணித்து சிங்களம் மேலெழும்ப முற்படும் நபர்களின் செயல்களினால் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்தினை பெற்றுக்கொடுப்பதில் இடர்பாடுகள் ஏற்படும். முக்கிய இடங்களில் தமிழ் மொழி இடம்பெறாத நிலைமையும் இதனால் உருவாகும். சொந்தத்தாயை விட்டு விட்டு மாற்றாந் தாயை கொண்டாட எவரும் முற்படக்கூடாது.

ஒரு இனத்தின் கலை, கலாசாரம் என்பன முக்கியத்துவம் மிக்கனவாகும். இதனை மறக்கக்கூடாது. எம்மவர்களின் பிழையான நடத்தை காரணமாக இந்துக்களின் கோயில்கள் பல இல்லாது கைநழுவிப்போயுள்ளன. சில இடங்களில் கோயில்கள் சிற்றுண்டிச்சாலையாகவும் மாற்றப்பட்டு பெரும்பான்மையினர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலை கலாசாரங்களும் அழிவடைந்துள்ளன. எதிர்கால சந்ததிக்கு எமது அடையாளத்தை உறுதிப்படுத்த எதை விட்டுச் செல்ல உள்ளோம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எம்மவர்கள் சிங்கள மயமாக முற்படுவதால் எமது இனத்தின் தனித்துவமும் சீர்குலைகின்றது. 

இந்துக்களின் திருமண சடங்குகள் உள்ளிட்ட ஏனைய கிரியைகள் பலவும் அர்த்தம் மிக்கவையாகும். வெள்ளையர்களே எமது கிரியைகளின்  முக்கியத்துவத்தினைக் கண்டு பிரமித்துப் போகின்றார்கள். இந்நிலையில் நாம் எமது கிரியைகளின் பெருமைகள் உணராது மாற்று இனத்தவர்களின் கிரியைகளை பின்பற்றுவது எவ்விதத்தில் நியாயமாகும். இந்துக்களின் உணவுவகைகள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று விளங்குகின்றன. எனினும் எம்மவர்கள் இன்று இதனை புறந்தள்ளி சிங்கள மற்றும் மேற்கத்தேய உணவுகளுக்கு முக்கியத்துவமளிக்கின்றனர். இது எம்மவர்களின் அறியாமையையே வெளிப்படுத்துகின்றது. எமது இனத்தை நாமே அழிக்கும் நடவடிக்கைகள் இனியும் தொடரக்கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04