ஏறத்தாழ இலங்கை மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வெளிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட நபரை நேற்று கட்டுநாயக்கவில் வைத்து பாதுகாப்பதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் சகல விதமான சோதனைகளையும் முடித்துக் கொண்டு விமானத்தில் ஏற சென்ற போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மிக சூட்சுமமான முறையில் தனது பயணப்பை மற்றும் கைப்பைகளில் 62,500 அமெரிக்க டொலரை மறைத்து வைத்து சென்றுள்ளார். அவை இலங்கை மதிப்பில் 9,679,037 ரூபா பெறுமதியுடையவை.

கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட சட்ட விரோத பணத்தொகையையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சுங்க பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.