ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்கா சென்றிருந்த ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  இன்று காலை 8.45 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.

இந்த விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  72 ஆவது ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை  அமர்வில் உரை­யாற்­றி­ய­துடன்   பல்­வேறு  முக்­கி­யஸ்­தர்­க­ளையும்  சந்­தித்து   பேச்­சு­வார்த்தை நட­த்தி­யி­ருந்தார். 

குறிப்­பாக  பாகிஸ்தான்  மற்றும் நேபாளம் ஆகிய நாடு­களின் பிர­த­மர்­களை   சந்­தித்து  இரு­த­ரப்பு  உறவு குறித்து  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  உரை­யாடி­யி­ருந்தார். 

அத்­துடன் ஐக்­கிய நாடுகள்   செய­லாளர் நாயகம்   அன்­டோ­னியோ குட்­ர­ஸையும் ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை  ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசேனையும்  இந்த விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி சந்­தித்து பேச்சு  நடத்­தி­யி­ருந்தார். 

அத்­துடன்  ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை  அமர்வில்  மேலும் சில  அமர்­வு­க­ளிலும் ஜனா­தி­பதி கலந்­து­கொண்­டார். ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் குட்ரஸ் மற்றும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் ஆகியோர் ஏற்­பாடு செய்த வர­வேற்பு  நிகழ்­வு­க­ளிலும் ஜனா­தி­பதி பங்­கேற்­றி­ருந்தார். 

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி  நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்­கா­கவும்  மனித உரி­மை­யையும் சுதந்­தி­ரத்­தையும்  பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும்   அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு   ஐக்­கிய நாடுகள் சபையும்   சர்­வ­தேச சமூ­கமும்  ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

அத்­துடன் ஐக்­கிய நாடுகள்   செய­லாளர் நாயகம்   அன்­டோ­னியோ குட்ரஸையும் ஐக்கிய நாடுகள்  மனித உரிமை  ஆணையாளர்  செய்ட் அல் {ஹசேனையும்  இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி  அழைப்பு விடுத்திருந்தார்.