கொழும்பிலிருந்து காங்கேசன் துறை நோக்கி பயணித்த அஞ்சல் ரயில் அநுராதபுரம், யாழ்ப்பாணம் பிரதான வீதியில் யாழ்ப்பாண சந்திக்கருகிலுள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் வவுனியாவிலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு பழங்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதியே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.