2000 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது.!

Published By: Robert

24 Sep, 2017 | 04:12 PM
image

நீண்ட காலமாக சட்டவிரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் இக் கழிவு தூள்களை ஏற்றி வந்த சாரதி ஒருவரையும் திம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை நகர் மைதானத்திற்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் கழிவு தேயிலையை லொறி ஒன்றிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கும் பொழுது திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு இவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

குறித்த இடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலைகளை கலப்பிடம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை, இந்த இடத்திலிருந்து 2000 கிலோ கழிவு தேயிலை தூளுடன் வாகனமும், வாகன சாரதியும் கைது செய்யப்பட்டதுடன் இந்த கலப்பிட நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள உரிமையாளரையும் திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த உரிமையாளர் கம்பளை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இருவரையும், லொறியையும் நாளை ஹட்டன் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35