தமிழ்த் திரையுலகில், இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்திருக்கும் படங்களில் நேர்த்தியான படமாக்கல் மூலம் பெருவெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா! பலரும் இந்தப் படத்தைப் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

அந்தப் பாராட்டுக்களின் உச்சகட்டமாக, விக்ரம் வேதாவை ஹிந்தியில் தனது ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பதற்காக படத்தின் தயாரிப்புத் தரப்பிடம் பொலிவுட்டின் ‘கிங் கான்’ ஷாருக் கான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஷாருக் கான் விக்ரமாக நடிப்பாரா, வேதாவாக நடிப்பாரா அல்லது தயாரிப்பை மட்டும் கவனிப்பாரா என்று தெரியவில்லை.

விக்ரம் வேதாவின் முன்னோட்டத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைத்தவர் ஷாருக் என்பது நினைவிருக்கட்டும்!