டோனியும் கோலியும் மாறி மாறி கிரிக்கெட் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்தூரில் இன்று நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால், தொடர்ச்சியாக அதிக ஒரு நாள் போட்டிகளில் வெற்றி தேடித் தந்த அணித் தலைவர் என்ற டோனியின் சாதனையை கோலி சமன் செய்வார்.

2008 நவம்பர் முதல் 2009 பெப்ரவரி வரை டோனி தலைமையில் விளையாடிய இந்திய அணி, ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்தது.

தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கைக்கெதிரான ஒரு நாள் போட்டிகளும், அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டு ஒரு நாள் போட்டிகளுமாக மொத்தம் எட்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இன்று நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெல்லுமானால், தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளை வென்ற டோனியின் சாதனையை கோலி சமன் செய்வார். செய்வாரா?