பிரேமம் என்ற ஒரு படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதிற்கும் புகழின் உச்சிக்குச் சென்றவர் நடிகை சாய் பல்லவி. இவர் நடித்து அண்மையில் வெளியான தெலுங்கு படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் காரணமாக இவருக்கு தலைக்கனம் ஏறிவிட்டதாக அவருடன் பணியாற்றும் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் படபிடிப்பிற்கு தாமதமாக வருகிறார். தாமதமாக வந்ததற்கு காரணம் கேட்டாலும் சொல்வதில்லை. இதனால் இவர் உடன் நடிக்கும் நடிகரிடம் இந்த கோபத்தைக் காட்டுகிறாராம். இதனால் படக்குழுவினர் இவரைப் பற்றி குறைக் கூற தொடங்கியிருக்கிறார்கள். வளரும் நடிகையான இவருக்கு இது தேவைதானா? என்றும் வருத்தப்படுகிறார்களாம்.

கால்ஷீட் சொதப்பலில் இருக்கும் நடிகை சாய் பல்லவிக்கு, தெலுங்கு திரையுலகினர் நயன்தாராவைப் போல் விரைவில் ரெட் கார்டு போடப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. 

இவர் தற்போது ஏ எல் விஜயின் இயக்கத்தில் கரு என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்