முட்டைகளை இடும் அதிசய மலை

Published By: Sindu

23 Sep, 2017 | 06:20 PM
image

சீனாவிலுள்ள சான் டா யா குன்றில் 30 அண்டுகளுக்கு ஒரு முறை கற்கள் முட்டையிடுவதாக ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் இக் குன்றை சீன மொழியில் "முட்டையிடும் மலை" என்று அழைத்து வரு கின்றனர்.

குறித்த முட்டையிடும் மலையை சூழவுள்ள மக்கள் இந்த முட்டைகளை “கடவுள் முட்டைகள்” எனவும் “அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்” எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இக் கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் தத் தம் வீடுகளில் ஆக குறைந்தது ஒரு முட்டையையாவது வைத்து வழிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், 

“இக் குன்றானது 9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்டது,  இம் மலையில் தோன்றும் முட்டைகள் சுண்ணாம்பு பாறைகளாலான வெவ்வேறு வடிவிலானவை, 

ஆனால் இக் குன்றில் ஏன்? எவ்வாறு? முட்டைகள் உருவாகின்றது போன்ற வினாக்களுக்கான முடிவுகள் இது வரை நடாத்திய ஆய்வுகளில் வெளிவரவில்லை,  விரைவில் இதற்கான அறிவியல் சார்ந்த காரணம் மற்றும் விளக்கத்தை வெளியிட முடியும்” எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right