கிண்ணியா, குறிஞ்சாங்கேணி பகுதியில் பொதுமக்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்ட கூரிய வாள் ஒன்றை வைத்திருந்த இளைஞன் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸாருடன் இனைந்து குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய முகம்மது றினாஸ் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனையும் கைப்பற்றப்பட்ட வாளையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.